ஒப்பந்த செவிலியர்களை பணி நீக்கம் செய்த என்எல்சி மருத்துவமனை கண்டித்து போராட்டம்

நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய உதவி செவிலியர்களை பணி நீக்கம் செய்த  என்எல்சி மருத்துவமனை  கண்டித்து செவிலியர்கள் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, பொது மருத்துவமனையில் உதவி செவிலியர், மகப்பேறு உதவியாளர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், எக்ஸ்ரே தொழில்நுட்ப வல்லுநர், மற்றும் இயன்முறை மருத்துவர் என 32 நபர்கள் ஒப்பந்த அடிப்படையில், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகின்றனர்.

அவ்வாறு பணி புரியும் இவர்களுக்கு PF பிடித்தும்,போக, மாத சம்பளமாக ரூபாய் 13 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் கடந்த ஏழு ஆண்டுகாலமாக எவ்வித சம்பள உயர்வு இல்லாமல், பணிபுரிந்த  வந்த நிலையில், ஒவ்வொரு முறையும் ஒப்பந்தம் காலம் முடியும் போது மீண்டும் பணிக்கு சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்றுடன் நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த ஊழியர்களின் ஒப்பந்த காலம் முடிவடைந்ததால்,  அவர்களை மீண்டும் பணிக்கு சேர்க்காமல், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் புதிதாக ஆள் சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை கண்டித்தும், பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வை வழங்க கோரி என்எல்சி மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்திற்கு நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் முதன்மை சங்கமாக திகழக்கூடிய, திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், மருத்துவமனை ஊழியர்களுக்காக போராட்டத்தை கையில் எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *