தலைமைச் செயலாளர் மீதான அவமதிப்பு வழக்கை முடித்து வைத்த உயர் நீதிமன்றம்

Madurai High Court

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. நீதிமன்ற உத்தரவுகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்று ஏற்கனவே அனைத்து துறை செயலாளர்களுக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது- அரசு தரப்பு.

மேலும் மனுதாரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விட்டது என தெரிவித்ததை தொடர்ந்து தலைமைச் செயலாளர் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கூறிய மனுவை முடித்து வைத்து நீதிபதி உத்தரவு. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் அய்யனார் முருகள் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: 

உத்தமபாளையம் பேரூராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றிய என்னை, பணி நீக்கம் செய்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் உத்தரவிட்டார். அவரது உத்தரவை ரத்து செய்து எனக்கு வேண்டிய பதவி உயர்வு மற்றும் பணப்பலன்களை வழங்க உத்தரளிட வேண்டும் என 2016ல் வழக்கு தொடர்ந்தேன் இந்த வழக்கில் நான் பணி நீக்கம் செய்யப்பட்ட இடைப்பட்ட காலத்துக்கு 25 சதவீத ஊதியம் வழங்க வேண்டுமென 28.2.2020ல் உத்தரவிடப்பட்டது. 

இதை எதிர்த்து தாக்கலான மேல்முறையீடு தள்ளுபடியானது இருப்பினும் நீதிமன்ற உத்தரவுபடி எனக்கு 25 சதவீத ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையின் அப்போதைய செயலாளராக இருந்த சிவ்தாஸ்மீனா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

 இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், மனுதாரருக்குரிய பதவி உயர்வு மற்றும் பணப்பலன்கள் வழங்கப்பட்டது நீதிமன்ற உத்தரவுகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டுமென அனைத்து துறை செயலர்களுக்கும், கலெக்டர்களுக்கும் ஏற்கனவே சுற்றறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. 

அரசு வழக்கறிஞர்களின் ஆலோசனையைப் பெற்று தேவைப்பட்டால் மேல் முறையீடு செய்யலாம் அப்பில் அல்லாத உத்தரவுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டுமென அதில் கூறப்பட்டுள்ளது” என்றார் இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூறிய மனுவை முடித்து வைத்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *