போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த எஸ்எஸ்ஐ போலீசில் சரண்

கைது

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த நெருப்பூர் அருகே மணியகாரன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சகாதேவன் (50) இவர் ஏரியூர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் ஏரியூர் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண்ணுடன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. அப்போது அந்த பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் பழகியதாக கூறப்படுகிறது. 

அந்தப் பெண்ணுக்கு தற்போது ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. அப்பெண் 18 வயது பூர்த்தி அடைவதற்கு முன்பே குழந்தை பெற்றதால் எவ்வித புகாரும் சகாதேவன் மீது போலீஸ் ஸ்டேஷனில் கொடுக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம்  அந்த பெண்ணிற்கு 18 வயது பூர்த்தி அடைந்ததையடுத்து தர்மபுரி எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி. ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்களிடம் புகார் கொடுத்துள்ளார். 

இவரின் உத்தரவின் பெயரில் பென்னாகரம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில்  சகாதேவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தகவலறிந்த சகாதேவன் தலைமறைவாக இருந்து வந்தார். தலைமறைவாக இருந்த அவர் நேற்று பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். இதனையடுத்து போலீசார் அவரை தர்மபுரி மாவட்டம் மைலா கோர்ட்டில் ஆஜர் படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர். 

மேலும் இவர் பணியில் இருந்தபோது போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலர்களை திருடி விற்றதில் கைது செய்யப்பட்டு மூன்று மாதம் சிறையில் இருந்து வெளியில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திருமணமான மைனர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைதாகியுள்ள எஸ்.எஸ்.ஐ சகாதேவன் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை பாய  இருக்கிறது.. என்பது குறிப்பிடதக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *