முதல்வரும் ஆளுநரும் இணைந்து செயல்பட வேண்டும்; அன்புமணி ராமதாஸ் அட்வைஸ்
நாடாளுமன்ற உறுப்பினர், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தல் கோவை விமான நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்கள் சிந்தித்து பேசினார். அதில், கோவை மாநகரில் 10-15 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வழங்கப்படுகிறது.
அதுவும் சரியான நேர் வழங்கப்படுவதில்லை எனவும் தரமற்ற சாலைகளால் கோவை மாநகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது எனவும்,முன்பு அதிகம் பேர் கோவை வர விருப்பம் இருந்த நிலையில், தற்போது கோவையில் இருந்து மக்கள் வெளியேறுகின்ற சூழல் உள்ளது எனவும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் அவர்களும் வெளியேறுகின்ற சூழல் உள்ளது எனவும் குற்றம் சாட்டினார்.
ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் போராட்டம் நடத்தி வருவதால், தூய்மை இல்லாத நிலை உள்ளது எனவும் முதல்வர் கோவை மாவட்டத்திற்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்ட அன்புமணி ராமதாஸ்,வருகிற ஜனவரி மாதம் 7,8 ஆம் தேதி தமிழக அரசு மாநாடு நடத்தவுள்ளது.
அதற்கு முன் தமிழக அரசு தொழிற்சாலைகளை தக்க வைக்க வேண்டும் எனவும்,கொரோனா, ஜி.எஸ்.டி., போன்ற காரணம் இருந்த நிலையில், மின் கட்டணம் உயர்வு தொழிற் கூடங்களை பாதித்துள்ளது. மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும் இதை செய்யாமல் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினாலும் பலனில்லை, இந்த பிரச்னை தீர்த்தால் தான் ஒரு டிரில்லியன் டாலர் என்ற இலக்கை எட்ட முடியும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருவது தொடர்பாக பேசிய அன்புமணி ராமதாஸ், முதல்வரும், ஆளுநரும் இணைந்து செயல்பட வேண்டும், ஆளுநர் நடுநிலையாக செயல்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி, நீதிபதி போன்று ஆளுநர் செயல்பட வேண்டும் எனவும் தமிழக அரசு தீர்மானத்தை 2-3 ஆண்டு தேக்கி வைக்கக்கூடாது,
ஆளுநரும் முதல்வரும் ஒன்றாக செயல்பட வேண்டும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆளுநர் தடையாக இருக்கக் கூடாது உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற பிறகுதான் ஆளுநர் மசூதக்கலை திருப்பி அனுப்பியதாக கூறிய அவர் ஆளுநருக்கு எந்த ஈகோபம் இருக்கக் கூடாது எனவும் தமிழக மக்களின் நலன் கருதி செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்
2000ஏக்கர் அரசு தரிசு நிலம் உள்ளது. விவசாய நிலத்தை அழித்து தொழிற்சாலைகள் அமைப்பது என்பது தவறான நடவடிக்கை, முன்னுதாரணம் என தெரிவித்த அன்புமணி ராமதாஸ் கோவை அன்னூர் சிப்காட் திட்டத்தை ரத்து செய்தது போன்று செய்யாரில் செய்ய வேண்டும் எனவும் அன்னூருக்கு ஒரு நியாயம்? செய்யாருக்கு ஒரு நியாயமா? எனவும் இதை ரத்து செய்யவில்லை என்றால், பாமக மிகப்பெரிய போராட்டம் நடத்தும் எனவும் தெரிவித்தார மேலும் திருவண்ணாமலையில் தொழிற்சாலைகள் வேண்டும், ஆயிரக்கணக்கான தரிசு நிலத்தில் அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக முதல்வர் இந்த கூட்டத்தில் அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட அன்புமணி ராமதாஸ், சென்சஸ் மத்திய அரசு எடுக்க வேண்டும், சர்வே யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். பீகாரில் எடுக்கப்பட்டது சர்வே. தமிழக அரசு ஏன் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க தயங்குகிறது? சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காமல் சமூகநீதி பேச உங்களுக்கு தகுதியில்லை எனவும் சமூக நீதி பேச அடித்தளமே சாதிவாரி கணக்கெடுப்பு தான்,
தமிழகத்தில் 540 சமுதாயங்கள் உள்ளது , பின்தங்கியுள்ள சமூகங்களை முன்னேற்றுவது சமூகநீதி, அதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் எனவும் இதுதொடர்பாக முதல்வரை சந்திக்க திட்டமிட்டு உள்ளதாகவும், அனைத்து கட்சிகளை சந்தித்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அழுத்தம் கொடுப்போம் எனவும் நரிக்குறவர்களுக்கு சிறப்பு திட்டங்கள் கொண்டு வர வேண்டும் அதுதான் சமூக நீதி எனவும் தெரிவித்தார்.
ஆளுநர் எந்த கொள்கையும் பேச கூடாது , சில நேரங்களில் அதை மீறி பேசுவது தவறு எனவும் தெரிவித்த அன்புமணி ராமதாஸ், தமிழக அரசின் நலனுக்கு தடையாக இருக்கக்கூடாது,ஆளுநர் நடுநிலையாக செயல்பட வேண்டும், அதுதான் ஆளுநருக்கு அழகு என தெரிவித்தார்..
தேசிய மருத்துவ கவுன்சில் தடையை அறிவித்தார்கள். இதை அமல்படுத்தினால், தமிழகத்தில் மருத்துவ இடங்கள் குறைவதுடன் மருத்துவ கல்லூரிகள் தொடங்க முடியாது. இதுதொடர்பாக முதலில் அறிக்கை விட்டவன் நான் தான் என தெரிவித்தவர், கட்சி தொடங்குவதில் இருந்து மது ஒழிக்க ஆயிரக்கணக்கான போராட்டங்கள் நடத்தி உள்ளார் ராமதாஸ்.
அதன் பின் தான் மது விலக்கு கொள்கையை பற்றி பேசினார்கள், அதை ஏற்றுக்கொள்வோம் என சொன்னார்கள் எனவும் தேசிய நெடுஞ்சாலையை மது கடைகளை முட வேண்டும் என தீர்ப்பை நாங்கள் பெற்றவுடன், தமிழகத்தில் 3200 மது கடைகள் மூடப்பட்டது எனவும் 7000 மது கடைகள் இருந்த நிலையில் தமிழகத்தில் 5000 மது கடைகள் தான் உள்ளது எனவும் தீபாவளி, பொங்கலுக்கு மது கடைகளை மூடுங்கள் எனவும் தெரிவித்தார்.
மது கடைகள் முட தமிழக அரசுக்கு துளியும் எண்ணம் இல்லை என தெரிவித்த அன்புமணி ராமதாஸ், சென்னை சிதம்பரம் அரங்கில் மிகப்பெரிய பார் ஆக்க உள்ளனர் எனவும் அது தவறானது எனவும் பாமக தொடர்ந்து மதுவுக்கு எதிராக போராடி வருகிறது எனவும் தெரவித்தார்.
இந்தியாவில் அதிகளவு சாலை விபத்துகள் தமிழகத்தில்தான் நடக்கிறது எனவும் சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணம் மது. மது கடைகளை குறைத்தால் விபத்துக்களை குறைக்கலாம், தீபாவளி அன்று நடந்த சாலை விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 12 பேர் மது குடித்து சாலை விபத்தில் உயிரிழந்ததாக தெரிகிறது எனவும் தெரிவித்தவர்
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் சாலை 400 மீட்டர் தொலைவில் கடந்த 10 ஆண்டில் 1800 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் மனித உயிர்கள் மீது இவர்கள் அக்கறை இல்லை எனவும் தெரிவித்தார். 2024 பாராளுமன்ற தேர்தல் தொடர்பான கேள்விக்கு பாமகவின் நிலைபாடடை விரைவில் அறிவிப்போம் என பதிலளித்தார்..