உச்சத்தை தொட்ட பூண்டு விலை; விவசாயிகள் மகிழ்ச்சி

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு புதிய உச்சத்தை தொட்டிருக்கும் கொடைக்கானல் பூண்டு விலையால் விவசாயிகள் மகிழ்ச்சி. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலா தளமாகும். கொடைக்கானல் நகர் பகுதியில் சுற்றுலாவை பிரதான தொழிலாக இருக்கக்கூடிய நிலையில். கொடைக்கானலை சுற்றி ஏராளமான மலை கிராமங்கள் இருந்து வருகின்றன.

குறிப்பாக மேல்மலை கிராமங்களான வில்பட்டி, பள்ளங்கி,  கூக்கால், மன்னவனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. கொடைக்கானல் மலை காய்கறிகளான கேரட், முள்ளங்கி, பீன்ஸ் உள்ளிட்ட மலை காய்கறிகள் சந்தைகளில் அதிகம் இடம் பிடித்து வருகின்றன,

இதில் புவிசார் குறியீடு பெற்ற மலைப்பூண்டு மிகவும் பிரசித்தி பெற்றதாக இருந்து வருகின்றன, புவிசார் குறியீடு பெற்ற ஆண்டு நல்ல நிலையில் பூண்டு விற்பனை இருந்து நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக பூண்டு விற்பனை 300 ரூபாய் வரை மட்டுமே அதிகமாக விற்பனையாகி வந்தது. 

தற்போது மலைப்பூண்டின் விலை புதிய உச்சத்தை கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு புதிய உச்சத்தை தொட்டுள்ளது, விவசாயிகள் விற்பனை செய்யும் பொழுது ஒரு கிலோ 400 ரூபாய் முதல் 450 வரை விற்பனையாகி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் கடந்த ஆண்டுகளில் அதிக பரப்பில் பூண்டு விவசாயம் செய்து விலை மிகவும் குறைந்ததால் பலரும் பூண்டு சாகுபடி செய்யாத காரணத்தினாலும் வரத்து குறைவு காரணத்தினாலும் இந்த விலை ஏற்றம் என்று விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் இதே நேரத்தில் எடுக்கக்கூடிய மலை கேரட்டின் விலை ஏழு ரூபாயுடன் பத்து ரூபாய் வரை விற்பனையாகி வருவதால் கேரட் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *