கலைஞரின் பேனா வடிவிலான முத்தமிழ் தேருக்கு பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்பு

மயிலாடுதுறைக்கு வருகை தந்த கலைஞரின் பேனா வடிவிலான முத்தமிழ் தேருக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் எம்பி, எம்எல்ஏக்கள் பொதுமக்கள் மாணவ மாணவிகள் மலர்தூவி உற்சாகமாக வரவேற்றனர். 

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு   கலைஞரின் பன்முக தன்மையினை இளம் தலைமுறையினருக்கு எடுத்து செல்லும் வகையிலும், “முத்தமிழ்த்தேர்” – அலங்கார ஊர்தி பயணம் கடந்த நான்காம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. 

கலைஞர் பயன்படுத்திய பேனா வடிவில் பின்புறம் இயந்திரத்தினால் திறந்து மூடும் வகையில் அமைக்கப்பட்டு பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட. அனைவரும் சென்று பார்வையிடும் வகையில் வாகனத்தின் உள்ளே, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கோபாலபுர இல்ல உள்அமைப்பு தத்ரூபமாக அமைக்கப்பட்டு அதில் அஞ்சுகம் அம்மாள் அவர்களின் உருவச்சிலையும் அதன் அருகில் முத்தமிழறிஞர் கலைஞர் இருக்கையில் அமர்ந்திருப்பது போன்ற உருவச்சிலையும், 

அவர் பயன்படுத்திய நூலகத்தின் மாதிரி வடிவமைப்பு, கலைஞரின் எழுத்துக்களுக்கு வடிவம் கொடுக்கும் அவரது படைப்புகளும், கவிதை, கட்டுரை, புதினங்கள், காப்பியங்கள் போன்றவற்றை கைப்பேசி வாயிலாக இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த முத்தமிழ்தேர் வாகன ஊர்தி  மயிலாடுதுறைக்கு வருகை தந்தது. 

மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜகுமார் பன்னீர்செல்வம் மாவட்ட வருவாய் அலுவலர் மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் மாணவ மாணவிகள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து   கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

தொடர்ந்து அனைவரும் முத்தமிழதேர் உள்ளே சென்று கலைஞரின் திருவுருவ சிலைக்கு மரியாதை செய்து கலைஞரின் படைப்புகளை கண்டு ரசித்தனர். ஏராளயமாமேனார் வாகனங்களின் முன்பு நின்று தங்களின் செல்போனில் படம்பிடித்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *