சுதந்திரப் போராட்ட வீரரான சங்கரய்யாவிற்கு அனைத்து கட்சியினரின் மௌன ஊர்வலம்

சுதந்திரப் போராட்ட வீரரான சங்கரையாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திருப்பூரில் அனைத்து கட்சிகளின் சார்பில் மௌன ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

சுதந்திரப் போராட்ட வீரரும் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கியதில் முதன்மையானவர்களில் ஒருவரும் , தமிழக அரசின் முதல் தகைசால் தமிழர் விருது பெற்றவருமான சங்கரய்யா வயது மூப்பின் காரணமாக 2 தினங்களுக்கு முன் உயிரிழந்தார். 

அவரது மறைவிற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வரக்கூடிய நிலையில் திருப்பூரில் அனைத்து கட்சியினர் கலந்துகொண்ட மௌன அஞ்சலி ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் குமரன் நினைவகத்தில் துவங்கிய மௌன ஊர்வலமானது குமரன் சாலை வழியாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே நிறைவடைந்தது. 

இரங்கல் ஊர்வலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக , அதிமுக , காங்கிரஸ் , மதிமுக , விசிக உள்ளிட்ட அனைத்து கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், விஜயகுமார் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் , மேயர் தினேஷ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

மௌன ஊர்வலத்தில் இறுதியில் மாநகராட்சி அலுவலகம் எதிரே அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த சங்கரய்யா உருவப்படத்திற்கு அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தி இரங்கல் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *