50 லட்சம், 400 பவுன் நகையை மோசடி செய்த நிதி நிறுவன மேலாளர் கைது

50 லட்சம் பணம் மற்றும் 400 பவுன் நகையை மோசடி செய்த சுப்புலட்சுமி என்ற பெண் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தனியார் நிதி நிறுவன மேலாளர் வேலவன் உள்ளிட்ட இரண்டு பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி முத்தையாபுரம் மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி லயன்ஸ் கிளப்பில் நிர்வாகி ஆக உள்ளதாக முத்தையாபுரம் பாரதி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட சுப்புலட்சுமி அந்தப் பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும்  கூலித்தொழில்  மக்களிடம் நான் தொண்டு நிறுவனம் வைத்துள்ளேன் 

இந்த தொண்ட நிறுவனத்தில் நீதிபதிகள் டாக்டர்கள் உள்ளிட்டோர் உள்ளனர் இதன் மூலம் சாதாரண ஏழை எளிய மக்களுக்கு வட்டியில்லா கடன் வங்கி மற்றும் நுண்ணிதி நிறுவனங்கள் மூலம் வாங்கி தருவதாகவும் மேலும் 5 பவுன் தங்க நகைகளை கொடுத்தால் இரண்டு சென்ட் நிலம் மற்றும் ஒரு பவுன் தங்கம் இலவசமாக வழங்கப்படும்  ஆசை வார்த்தை கூறியுள்ளார்.  மேலும் செழிய நங்கை மகளிர் குழு என்ற பெயரில் மகளிர் குழுவையும் துவக்கியுள்ளார். 

மேலும் பெண்களை கிராமத்தில் ஒன்று திரட்டி பெண்கள் மத்தியில் பேசிய சுப்புலட்சுமி தாங்கள் நகைகளை தங்களிடம் கொடுத்தால் தங்களுக்கு நிலம் வழங்கப்படும் மேலும் குறைந்த தொகை தான் என பல்வேறு ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் ஒரு மாதத்தில் கூடுதலாக பத்தாயிரம் தரப்படும் வெளிநாட்டில் இருந்து தங்களது நிறுவனத்திற்கு பணம் வர உள்ளதாகவும் ஆசைவாரத்தை கூறியுள்ளார்

இவ்வாறு சுப்புலட்சுமி கூறிய ஆசை வார்த்தையில் மயங்கிய அந்தப் பகுதியைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் குடும்பத்திற்கு தெரியாமல் தங்கள் பெயரில் வட்டியில்லா கடன் கிடைக்கும் எனக் கூறி வங்கி மற்றும் நுண்ணீதி நிறுவனங்களில் பணத்தைப் பெற்று சுப்புலட்சுமி இடம் அளித்துள்ளனர் இதில் சிலர் 5பவுன் தங்க நகை இரண்டு பவுன் ஒரு பவுன் என சுப்புலட்சுமியிடம் கொடுத்துள்ளனர்.  

இதைப் பெற்றுக் கொண்ட சுப்புலட்சுமி   நகையை கொடுத்தவர்களுக்கு இடத்திற்காக ஒரு பச்சை வண்ண சிறிய பிளாஸ்டிக் டோக்கனை அவர்களிடம் கொடுத்துள்ளார் இவ்வாறு அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களிடம் சுமார் 56 லட்ச ரூபாய் அளவுக்கு பணம் மற்றும் 400 பவுன் நகைகளை சுருட்டிய சுப்புலட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென தலைமறை வாகி உள்ளார். 

இதைத்தொடர்ந்து சுப்புலட்சுமி  தாங்களை ஏமாற்றியதை  அறிந்த பாதிக்கப்பட்ட பெண்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.  அந்த புகாரில் தங்களை சுப்புலட்சுமி என்ற பெண் ஆசை வார்த்தை கூறி தங்களை முழு மோசடி செய்துள்ளார் அவரை உடனடியாக கைது செய்து தாங்கள் இழந்த பணம் நகையை பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்

இதை தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் தலைமறைவாக இருந்த மோசடி பெண் சுப்புலட்சுமி மற்றும் அவருக்கு நகைகளை அடகு வைக்கஉடந்தையாக இருந்த தனியார் நிதி நிறுவன மேலாளர் வேலவன் என்பவரையும் கைது செய்தனர் மேலும் இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *