ஆன்லைன் வியாபாரத்தால், கடையை மூடக்கூடிய நிலை: வியாபாரிகள் புலம்பல்

ஆன்லைன் வியாபாரம் மூலமாக வாழ்வாதாரத்தை இழந்து கடையை மூடக்கூடிய நிலைமை உள்ளதாக வியாபாரிகள் புலம்பல். ஆன்லைன் மூலமாக பணம் மற்றும் நேரம் மிச்சம் ஆகுவதால் பொதுமக்கள் வரவேற்பு

இந்தியாவில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வரை ஆன்லைன் வியாபாரம் என்பது கிடையாது இதனால் மக்கள் தங்களுக்கு எந்த பொருட்கள் வாங்க வேண்டும் என்றாலும் கடைகளுக்கு நேரடியாக சென்று வியாபாரிகளை சந்தித்து பேரம் பேசி பொருட்களை வாங்கி வந்த காலம் மாறி தற்பொழுது உட்கார்ந்த இடத்தில் இருந்தே பொருட்களை வாங்கக்கூடிய கால சூழ்நிலை உருவாகி உள்ளது இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும் வியாபாரத்தை நம்பி உள்ள சிறு வியாபாரிகள் காலப்போக்கில் ஆன்லைன் வியாபாரம் மூலமாக பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இதனால் கடைகளில் SLOW POISON போல் மெல்ல மெல்ல வியாபாரம் குறைந்து வியாபாரம்  பெரும் நஷ்டம் ஏற்பட்டு கடையை மூடிவிட்டு வேறு தொழில் அல்லது வேலைக்கு செல்லக்கூடிய சூழ்நிலை தற்பொழுது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் பணப்புழக்கம் என்பது வெகுவாக குறைந்து விட்டது.

இது ஒரு புறம் என்றால் ஆன்லைன் மூலம்  செல்போன், எலக்ட்ரானிக்ஸ் சாமான்கள், செருப்பு, ஷூ, குழந்தைகள் விளையாட்டு சாமான்கள், ஆண்கள் பெண்கள் குழந்தைகள் டிரஸ், என எல்லாவிதமான பொருட்களும் ஆன்லைன் மூலமாக கிடைப்பதாகவும், கடையில் வாங்கும் பொருட்களின் விலையை விட ஆன்லைனில் வாங்குவதால் பொருட்களின் விலை குறைவாக இருப்பதாகவும் ஆஃபர் போடுவதால் மேலும் விலை குறைவதாகவும் தாங்கள் வாங்கிய பொருட்கள் சரியில்லை என்றால் உடனடியாக மாற்றிக் கொள்ளவும் ஆன்லைனில் வசதி உள்ளது என்றும், 

ஆயிரம் லட்சம் கணக்கில் பொருட்கள் வாங்கினால் அதனை EMI மூலம் செலுத்தும் வசதி உள்ளது . வங்கிகளில் வழங்கக்கூடிய கிரெடிட் கார்டு டெபிட் கார்டுகளை கொண்டு பொருட்களை வாங்கினால் அதிலும் தனி டிஸ்கவுண்ட் உண்டு மேலும் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, வருட கடைசி வார இறுதி நாட்கள் என பல தடவை ஆன்லைனில் ஆஃபர் போடுவதால் குறைந்த விலையில் தரமான பொருட்கள் எளிதில் கிடைப்பதாகவும், 

அதே நேரம் துணி எடுக்கவோ செல்போன் வாங்கவோ குடும்பத்துடன் கடைகளுக்கு சென்று நெருக்கடியில் சிக்கித் தவித்து டிராபிக்கில் சிக்கிக் கொள்வது  போன்ற விவகாரங்கள் இல்லாமல் வீட்டில் உட்கார்ந்தபடியே தங்களுக்கு தேவையான  பிராண்டட் பொருட்களை குறைந்த விலையில் கிடைப்பதால் தொடர்ந்து ஆன்லைனில் மூலமாக வாங்கி வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர் 

இதனால் தங்களுக்கு பணம் மிச்சம், நேரம் மிச்சம் ஆகுவதாக தெரிவிக்கின்றனர். வாங்கிய பொருட்கள் பிடிக்கவில்லை என்றால் உடனடியாக மாற்றிக் கொள்ளக் கூடிய வசதி இருப்பதால் தாங்கள் ஏன் கடைகளுக்கு சென்று அலைய வேண்டும் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர் மேலும் காலத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *