மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 குழந்தைகளின் குடும்பத்திற்கு ஐந்து லட்சம் நிவாரணம்

திண்டுக்கல் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ஐந்து லட்சம் நிவாரண தொகையை  உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள மாம்மானியூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் இவரது மனைவி நல்லம்மாள் இவர்களுக்கு  ஐந்து குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 6ம் தேதி அழகு மீனா வயது16, குமார் வயது 6, 

ஆகிய 2 பேரும் வீட்டில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.  இதில் அழகுமீனா மாற்றுத்திறனாளி ஆவார். இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக முதல்வர் முதலமைச்சர்  ஸ்டாலின் நேற்று தமிழக அரசின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார். 

இதனையடுத்து உடனடியாக இன்று  08.11.23 தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இறந்து போன குழந்தையின் ஊரான மம்மானியூர் கிராமத்திற்கு சென்றார். சம்பவம் நடைபெற்ற வீட்டை பார்வையிட்டார் பின்னர் தமிழக முதல்வர் சார்பாக  ஆறுதல் கூறினார் அதனை தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் ஆன சுந்தரம் மற்றும் நல்லம்மாளிடம் அரசின் உதவித்தொகை ரூ 5 லட்சத்திற்கான காசோலையை  வழங்கினார். மேலும் மம்மானியூர் கிராமத்தில் சுந்தரம் பெயரில் இலவச வீட்டு மனை பட்டாவை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் மாவட்ட ஆட்சியர் திருமதி பூங்கொடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் திமுக மாவட்ட கழகம் சார்பில் ரூ ஒரு லட்சம் மற்றும் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் சார்பில் ரூ 25 ஆயிரம் வழங்கப்பட்டது. 

பின்னர் அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் பேசுகையில் :-

மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த சுந்தரத்திற்கு குடும்பத்திற்கு பாதுகாப்பான வீடு வழங்கும் வகையில், உடனடியாக 3 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. அங்கு அரசின் திட்டங்களின் கீழ், விலையில்லா வீடு கட்டிக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த குடும்பத்தைச் சேர்ந்த இன்னொரு சிறுவன் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவரை ஒட்டன்சத்திரத்தில் உள்ள குருகுலத்தில் சேர்ந்து தொடர்ந்து படிக்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரை நன்கு படிக்க வைத்து, போட்டித் தேர்வுக்கு தயார்படுத்தி வேலைவாய்ப்பை பெற்றுத் தரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *