அரசு மருத்துவமனை சீர்கேட்டை கண்டித்து பாடைகட்டி நூதன போராட்டம்
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் அரசு மருத்துவமனை நிர்வாக சீர்கேட்டை கண்டித்து பாடைகட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 100 பேர் கைது பரபரப்பு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும், மருத்தவர்களை இரவு நேரங்களில் தங்கி பணி செய்து தர வேண்டும், மருத்துவமனைக்கு தேவையான அளவிற்கு உயிர் காக்கும் மருந்துகள் வழங்கிட வேண்டும்,
மருத்துவமனையில் சுகாதார முறையில் வைத்திருக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் பாடைகட்டி வைத்தீஸ்வரன் கோயில் அரசு பொது மருத்துவமனைக்கு ஊர்வலமாக நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி யினர்களை சீர்காழி காவல் கண்காணிப்பாளர் லாமேக் தலைமையான போலீசார் விரைந்து வந்து ஊர்வலமாக வந்தவர்களை வழிமறித்து பாடையை பிடுங்கி எரிந்து தடுத்து நிறுத்தினார்கள்.
இதனால் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது பிறகு காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்களை கைது செய்து வைத்தீஸ்வரன் கோயிலில் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்