நெடுஞ்சாலையை கடக்க முயன்ற 4-ஆம் வகுப்பு மாணவி அதிவேக பைக் மோதி பரிதாப பலி
திருத்தணி அருகே கனகம்மாசத்திரத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற 4-ஆம் வகுப்பு மாணவி மீது அதிவேகமாக வந்த இரு சக்கர வாகனம் மோதி தூக்கி வீசியதில் மாணவி பலியான சோகம். வாகன பதிவெண்ணை கொண்டு போலீசார் விசாரணை
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரம் அருகே உள்ள சீதாபுரம் கிராமம் வசிக்கும் சிலம்பரசன் -பொன்மணி தம்பதியினரின் மகள் பிரதீபா(8). அங்குள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு பயிலும் பிரதீபாவை தாய் பொன்மணி பள்ளிக்கு அழைத்துக்கொண்டு சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை கடந்துள்ளார்.
அப்போது திருவள்ளூரில் இருந்து திருத்தணி நோக்கி வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில் மாணவி தூக்கி வீசப்பட்டதால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் .
விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகன பதிவெண்ணை கொண்டு மேற்கொண்ட விசாரணையில் அது திருவள்ளூர் அடுத்த குன்னவலம் கிராமத்தைச் சேர்ந்த மதன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து இந்த விபத்து குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.