மருது பாண்டியர்களின் 222 வது நினைவு நாள்

மருது பாண்டியர்களின் 222 வது நினைவு நாள் திருப்பத்தூரில் அவரது நினைவிடத்தில்  அரசு விழா மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தேசிய கொடியை ஏற்றிவைத்து துவக்கி வைத்தார் பின்னர் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் 

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் 222 வது  நினைவு தினம் அரசு சார்பில் அனுசரிக்கப்படும் நிலையில் அவர்களது நினைவிடத்தில் மாவட்ட  ஆட்சியர் ஆஷா அஜித் தேசிய கொடி ஏற்றி உருவச்சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தி விழாவினை துவக்கிவைத்தார்.

இந்திய விடுதலை போரில் வெள்ளையர்களை எதிர்த்து போர் புரிந்த  மருதுபாண்டியர்கள் வெள்ளையர்களால் திருப்பத்தூரில் 1801 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டனர்.மருதுபாண்டியர்களின் வீரத்தையும் ,தியாகத்தையும் போற்றும் விதமாக  திருப்பத்தூரில் அரசு சார்பில் நினைவிடம் அமைக்கப்பட்டு திரு உருவ சிலையும் நிறுவப்பட்டுள்ளதுடன் அவர்களை தூக்கிலிடப்பட்ட இடத்தில் நினைவு தூனும் அமைக்கப்பட்டுள்ளது. 

அந்த இடத்தில் ஆண்டுதோறும்  அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி அரசு சார்பில் நினைவஞ்சலி செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டு 222 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களது நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் பங்கேற்றதுடன் ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி அவர்களது உருவச்சிலைகளுக்கு மாலை அனிவித்து மரியாதை செய்தனர். இதற்கு முன்னதாக மருதுபாண்டியர்களின் வாரிசுதாரர்கள் சார்பில் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *