கழிவு நீர் பிரச்சனையால் ‘கனெக்‌ஷன் கட்’தான் எச்சரிக்கும் அமைச்சர் முத்துசாமி 

பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் ஆய்வுக்கு பின் அமைச்சர் முத்துசாமி பேட்டி. சிப்காட் கழிவு நீர் பிரச்சனைக்கு நிரந்தரமாக தீர்வு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான ஆய்வு செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தில் இருந்து கழிவுநீர் வெளியில் விடப்படக்கூடாது. 

சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்று சுத்திகரித்து மீண்டும் அவர்களே பயன்படுத்திக் கொள்ள வேண்டு.ம் ஏற்கனவே மாசடைந்த நிலத்தடி நீரை தற்போது உள்ள ஏழு கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீரை எடுத்து சுத்திகரித்து இந்த ஆலைகளுக்கு வழங்கப்படும். 

இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்வாக உள்ள இந்த பகுதியில் நீர்மட்டம் குறையும், ஆலைகளில் இருந்து கழிவுகள் நிறுத்தப்பட்டு நிலத்தடி நீர்மட்டமும் குறைக்கப்பட்டால் கசிவு நீர் குறைந்துவிடும். இதற்கான கால அவகாசம் தேவைப்படும். இதற்கான  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது உடனடி நடவடிக்கையாக தற்பொழுது ஓடையில் செல்லும் கழிவு நீரை எடுத்து சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் கூடுதலாக பொது சுத்திகரிப்பு நிலையம் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்க திட்டம் உள்ளது. 

அது குறித்து ஆட்சியர் மூலம் ஆய்வு செய்யப்படும் அது அமைக்கப்பட்டால் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும், சிப்காட் தொழிற் நிறுவனங்களுக்கு 10% தண்ணீர் வெளியில் இருந்து வழங்கப்படுகிறது. அதற்கு பதிலாக இங்கிருந்து தண்ணீரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட ஆலைகள் பிரச்சனைகளை சரி செய்த பின் அவர்களுக்கு மீண்டும் இணைப்பு வழங்கப்படும். தண்ணீரை அதிகமாக பயன்படுத்தக்கூடிய 50 ஆலைகளை மாவட்ட ஆட்சியர் மூலம் நேரடியாக அழைத்துப் பேசி அவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்படும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *