காட்டு யானையை விரட்ட சென்ற கும்கி யானையை சம்பவம் செய்த யானைகள்

கட்டை கொம்பனை காட்டு யானையை விரட்டுவதற்காக சென்ற கும்கி யானை சீனிவாசனை காட்டு யானை தாக்கியதில் காயம் ஏற்பட்டது சிகிச்சை அளிப்பதற்காக கால்நடைத்துறை மருத்துவர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கடந்த காலங்களாக காட்டு யானைகள் கிராமப் பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது குறிப்பாக பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட இரும்பு பாலம் சேரங்கோடு சேரம்பாடி போன்ற பகுதிகளில் கட்டை கொம்பன் மற்றும் ராக்கெட் என என்ற இரு யானைகள் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது இதனால் மக்களும் போராட்டத்தில் இறங்கினர்.

இந்த நிலையில் அந்த இறு யானைகளும் ஊருக்குள் வராமல் தடுப்பதற்காக முதுமலையிலிருந்து விஜய், வசீம், பொம்மன், சீனிவாசன் போன்ற நான்கு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.

 குறிப்பாக காட்டு யானைகளை விரட்டுவதற்காக வந்த சீனிவாசன் என்ற கும்கி யானை கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பு தற்பொழுது அட்டகாசம் செய்து வரும் கட்டை கொம்பனுடன்  சுற்றி வந்த பழைய நண்பன்.

இந்த நிலையில் வழக்கம்போல இன்று அதிகாலை  கட்டுக்கொம்பன் யானை ஊருக்குள் வர முயற்சி செய்தது. அப்போது இந்த நான்கு கும்கி யானைகளும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக சென்றது. அப்பொழுது பழைய நண்பன் சீனிவாசனை பார்த்த கட்டை கொம்பன் வேகமாக வந்து வனத்துறையினரை விரட்டி விட்டு தனது பழைய நண்பன் சீனிவாசனை அழைத்துக் கொண்டு வனப்பகுதிக்கு சென்றது. நீண்ட நேரம் சீனிவாசன் யானையை பிரித்து அழைத்து வர வனத்துறையினர் போராடினார். 

அப்போது கோபமடைந்த கட்டை கொம்பன் பழைய நண்பனான சீனிவாசனை கடுமையாக தாக்கியது. இதில் கட்டை கொம்பன் தந்தத்தில் குத்தியதில் சீனிவாசன் யானையின் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்ட சூழ்நிலையில் நீண்ட நேரம் போராடி வனத்துறையினர் சீனிவாசன் யானையை அழைத்து வந்து தற்போது சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

முதுகுப் பகுதியில்  குத்தியதால் காயம் ஏற்பட்டுள்ளது உடனடியாக அங்கு முதுமலையில் இருந்து வந்த கால்நடை மருத்துவர் ராஜேஷ் காயங்கள் ஏற்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டார் பின்னர் எவ்வாறு சிகிச்சை அளிப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *