அம்மா, அண்ணாவுக்காக இல்லை ஈபிஎஸ்-க்காகதான் பாஜக பிரிவு- ஓபனாக பேசிய ஓபிஎஸ் அணி

எடப்பாடி கோரிக்கைகளை  பாஜக நிராகரித்திருக்கலாம் அதனால்தான் கூட்டணி முறிவு. இது தனிப்பட்ட பிரச்சனைகளுக்கான முடிவாக இருக்கும்-மருது அழகுராஜ். பேட்டி. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அதிமுக ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

 வெல்லத்தை கரைத்து வேரிலே ஊத்தினாலும் வேம்பில் கசப்பு தான் இருக்கும் என்பது பாஜகவுக்கு புரிந்திருக்கும் பாம்புக்குப் பால் வார்த்துவது ஏன் பல்லை புடுங்க ஆள் தேடுவது என்ற நிலையில் தான் இன்றைய அரசியல் உள்ளது. பட்டாசு வெடித்தார்கள் தலைமை கழகத்தில் தீர்மானம் போட்டு விட்டார்கள் தீர்மானத்தில் பாஜகவில் இருந்து மட்டும் தான் விலகுகிறோம் எதையெல்லாம் பெற வேண்டுமோ அவற்றையெல்லாம் பெற்றுக்கொண்டு எதை திருப்பிக் கொடுக்க வேண்டுமோ அதை எடப்பாடி திருப்பி கொடுத்து விட்டார். பாஜகவுக்கு எடப்பாடியின் அரசியல் என்னவென்று இப்போது  புரிந்திருக்கும் என்றார்

அதிமுகவுக்கு தீபாவளி முன்கூட்டியே வந்துவிட்டது என்று குத்தாட்டம் போடுவது ஏன்? அப்படியானால் இதுவரை பாஜகவுடன் கூட்டணி வைத்தது எதற்காக? இரண்டு வருடங்களில் ஆதாயங்கள் இருந்ததா? என்றார் எடப்பாடி என்று சொன்னால் துரோகம்.தமிழக மக்களும் தொண்டர்களும் இதை ஏற்க மறுக்கிறார்கள் இது உண்மையா? நாடகமா? என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள் 

ஒரு கட்சியோடு கூட்டணி இல்லை என்றால் கொள்கையில் உடன்பாடு இல்லை என்று சொல்லலாம் ஏன் டெல்லிக்கு கொச்சி வழியாக குறுக்கு வழியில் டெல்லி சென்று யாருக்கும் தெரியாமல் நட்டாவை சந்தித்து என்ன பேசினார்கள் வேறு ஏதும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வந்தார்களா?  பல சந்தேகங்கள் வருகிறது இந்த கூட்டணி முறிதல் உண்மையாக இருக்குமானால் எடப்பாடிக்கு பாஜக செய்த ஆதாயங்கள்  , தவறான வழியில் செய்த உதவிகள் பாவத்திற்கு பரிகாரம் தேடும் நிலையில் தான் பாஜக உள்ளது

எடப்பாடி நம்பிக்கைக்குறிய தலைவர் அல்ல கொள்கை கிடையாது கால் பிடிப்பார் ஆதாயம் பெறுவார் ஆதாயம் தந்தவரிடம் நன்றி மறப்பார் என்றார். எடப்பாடி ஒரு தலைவனாக கூட்டணி முறிந்ததுக்கு காரணம் சொன்னாரா? தனக்குத்தானே  பட்டாபிஷேகம் செய்து கொண்டாரா? பாஜக அதிமுக தொண்டர்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள் பாஜகவை தூக்கி சுமந்தோம் என்றெல்லாம் பேசுகிறார்கள் அதிமுக தோல்விக்கு எடப்பாடி தான்  காரணம் நாகரிகமற்ற அரசியல் திட்டமிட்ட வன்மங்கள் சக மனிதனை அழிக்க வேண்டும் போன்ற தரம் தாழ்ந்த நடவடிக்கையில் எடப்பாடி உள்ளிட்டோர் ஈடுபடுகின்றனர் 

கூட்டணிகள் பிரிவது இயல்புதான் அதற்காக திருவிழா போல பட்டாசு வெடிப்பது நியாயம் தானா? இப்பொழுதும் இந்த முடிவை முழுமையாக நம்புவதற்கு மக்களும் எங்களைப் போன்றவர்களும் ஆச்சரியத்தில் பார்க்கின்றோம் ஒரு கட்சியுடன் கூட்டணி இல்லை என்று சொல்வதற்கு காலம் பதில் சொல்லும் என்றார் , ஈரோட்டில் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு, சின்னம் பெறுவதில் இருந்து அனைத்து விதஉதவிகளை பா.ஜக செய்து வந்தார்கள்.பல பஞ்சாயத்துகள் எல்லாம் பாஜக பேசியதை நினைவு கூறுர்ந்தார். 

அண்ணாவை பேசினார் ஏன்? அதற்கு முன்பு அம்மாவை பேசினார் மூன்று தினங்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் கூட்டணி முறியும் என்று சொன்னார்கள் அவர்கள் மன்னிப்பும் கேட்கவில்லையே என்றார் ஒரு கட்சியோடு கூட்டணி இல்லை என்பதற்கு முதல் நாள் டெல்லி தலைமையைச் சென்று சந்தித்து வந்தார்களே?என்ன பேசினார்கள் என்று கேள்வி எழுப்பினார். என்றார். 

காங்கிரஸ் இல்லாத பாரதம் திராவிடம் இல்லாத தமிழ்நாடு என்றெல்லாம் பாஜகவினர் .பேசும்போது  மேடையில் அமர்ந்து  என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்றார். கூட்டணியில் குழப்பம் இல்லை கருத்து வேறுபாடுகள் இல்லை  தனிப்பட்ட ஆதாயங்களுக்காக   ஏதோ ஒன்றுக்காக தேர்தலுக்கு முன்பே செய்து வையுங்கள் என்று கூட்டணி வைத்தார்கள்.   

வழக்குகளிருந்து காப்பாற்ற, அமலாக்க துறை மூலம்  நடவடிக்கை எடுக்காமல் இருக்க குட்கா ஊழல் என்ற பல கோரிக்கைகள் விதித்து அதனை பாஜக நிராகரித்திருக்கலாம் அதனால் கூட்டணி முறிவு இது தனிப்பட்ட பிரச்சனைகளுக்கான முடிவாக இருக்கும் என்றார்.  

OPS தலைமையிலான அதிமுக என்பது ஒரு சக்தி வாய்ந்த இயக்கம், பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் உடன் இலக்கண உறவு வைத்துள்ளோம்.நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது ஓபிஎஸ் தான் நல்ல முடிவு எடுப்பார் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *