கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணையில அதிருப்தி.. நீதிபதி விமர்சனம்

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சிபிசிஐடி போலிசார் இன்று இடைகால அறிக்கையை உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில் விசாரணை அதிருப்தி அளிப்பாதாக  மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார்.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை இன்று உதகை உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்காக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் கனகராஜ் மற்றும் CBCID ADSP முருகவேல் ஆகியோர் ஆஜராகினர். அதே போல குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரில்  வாளையார் மனோஜ் மற்றும் ஜம்சீர் அலி  ஆகியோர் ஆஜராகினர்.

வழக்கு விசாரணை தொடங்கியதும் சிபிசிஐடி போலிஸ் தரப்பில் இது வரை 167 பேரிடம் விசாரித்து உள்ளதாகவும் குற்றம் சாட்டபட்டவர்களிடம் பறிமுதல் செய்யபட்டுள்ள செல்போன்கள் மற்றும் செல்போன் டவர் லொகேசன் உள்பட தகவல் தொடர்பு ஆதாரங்களை திரட்டி ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருவது குறித்த தகவல்கள் அடங்கிய 4 பக்க இடைகால அறிக்கையை சிபிசிஐடி போலிசார் மாவட்ட நீதிபதி அப்துல் காதரிடம் தாக்கல் செய்தனர்.

அதனை வாங்கி படித்த நீதிபதி வழக்கு விசாரணைக்கு வரும் போதெல்லாம் இதே தகவலை கூறுவதாகவும் விசாரணை அதிருப்தி அளிப்பாதாக உள்ளதாக கூறினர். மேலும் விசாரணை குறித்து நீதிமன்றத்தில் இருட்டடிப்பு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

அப்போது வழக்கில் தொடர்ந்து புலன் விசாரணை நடத்த வேண்டி இருப்பதனால் கால அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து வழக்கு விசாரணை அக்டோபர் 13-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *