சுங்கச்சாவடி கட்டணம் ரூ.5 முதல் 240 வரை உயர்வு, ஓட்டுநர்கள் எதிர்ப்பு

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி கட்டணம் ரூபாய் 5 முதல் ரூபாய் 240 வரை உயர்ந்துள்ளதை அடுத்து நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது – வாகன ஓட்டிகள் எதிர்ப்பு

தமிழகத்தில் இருபதுக்கு மேற்பட்ட சுங்க சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வானது அமலுக்கு வந்துள்ள நிலையில் விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டணமானது ரூபாய் 5 லிருந்து ரூபாய் 240 வரை உயர்ந்துள்ளது. கார், ஜீப் போன்ற வாகனங்கள் ஒருமுறை கட்டணம் ரூபாய் 100 இல் இருந்து 105 ஆக உயர்ந்துள்ளது. 

அதேபோன்று டிரக், பேருந்து கட்டணம் ஒரு முறை கட்டணம் 355 லிருந்து 360 ஆக உயர்ந்துள்ளது கனரா வாகனங்களுக்கான மாதாந்திர கட்டணம் ரூபாய் 240 வரை உயர்ந்துள்ளது இந்த கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததே தொடர்ந்து வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். கட்டண உயர்வு காரணமாக எங்களுக்கான ஊதியமும் குறைய வாய்ப்புள்ளதாக லாரி ஓட்டுநர்கள் கவலையுடன் தெரிவித்தனர்

ஏற்கனவே டிஸ் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளோம் அதை குறைக்க ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆனால் சுங்கச்சாவடிகளில் அடிப்படை வசதிகளும் செய்து கொடுப்பதில்லை கட்டணம் மட்டும் கூடுதலாக உயர்த்தி வாங்குகின்றனர். இந்த சுங்க சாவடியை தேவையில்லை என்பது கார் மற்றும் லாரி ஓட்டுனர்களின் கோரிக்கையாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *