அழகு சாதன பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து அசத்தும் கல்லூரி மாணவிகள்

குழுவாக சேர்ந்து உற்பத்தி, கல்லூரியிலேயே விற்பனை ,  படிக்கும் காலத்திலேயே தொழில் முனைவோராக அசத்தும் மகளிர் கல்லூரி மாணவிகள்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி  கல்லூரி சாலையில உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் (உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரி) முதலாம் ஆண்டு முதல் மூன்றாம் ஆண்டு வரை பயிலும் மாணவிகளின் ஆர்வத்தை கண்டறிந்து  அவர்களை தனி தனி குழுவாக ஒன்றினைத்து , மகளிர் பயன்படுத்தும் , அழகு சாதன பொருட்களான டால்கம் பவுடர், ஆர்கானிக் கிரீம்கள், உடை அலங்காரம், பாட்டில் , மற்றும் கண்ணாடி  குவளைகளில் ஓவியம், பனை ஓலை  பொருட்கள் , வண்ண ஓவியங்கள், வளையல்களில் அலங்கார வேலைப்பாடுகள், உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயார் செய்வதோடு மாதம் ஒரு முறை அதை கல்லூரியிலேயே விற்பனை செய்யும் வாய்ப்பும் ஏற்படுத்தப்படுவதால் விற்பனைக்கு பிந்தைய குறைபாடுகளை தெரிந்து கொண்டு  சரி செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது

சில மாணவிகள்  குடும்பங்களில் ஈடுபடும்  தொழில் வாய்ப்புகளை , ஆர்வமுள்ள  மாணவிகளுக்கு கற்று தரும் சூழலும் ஏற்பட்டுள்ளது படிப்பு நேரம் தவிர zero Hours  நேரங்களில் இந்த பயிற்சி உற்பத்தியில் ஈடுபடுவதால்  படிக்கும் நேரத்தில் உற்சாகமாக படிக்க முடியும் கல்லூரி படிப்பிற்கு பிறகு வேலை வாய்ப்பிற்கும், சொந்த தொழில் செய்யவும் இந்த பயிற்சி பேருதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த  தொழில் முனைவோர்   பயிற்சியில் மாணவிகள், முதல்வர் பேராசிரியைகள் வழிகாட்டுதலோடு ஈடுபட்டு வருகின்றனர்

10 குழுக்களாக மாணவிகள்  தொழில் முனைவோர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் தயாரிக்கும் பொருட்களை ஆன்லைன்  மூலம் விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது என்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *