சட்டமன்ற உறுதி மொழி குழு சுங்கச்சாவடியில் அனுமதி மறுப்பு; எம்.எல்.ஏ படுகாயம்

சட்டமன்ற உறுதி மொழி குழுவினரை (சட்டமன்ற உறுப்பினர்களை) சுங்கச்சாவடியில் செல்ல அனுமதி மறுப்பு ! எம்.எல்.ஏ வின் கார் மீது இரும்பு ராடு மோதி கார் கண்ணாடி உடைத்து சேதம் – சென்னை அண்ணாநகர் எம்.எல்.ஏ படுகாயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள மாடூர் சுங்க சாவடியை கடந்து கடலூரிலிருந்து  சட்டமன்ற உறுதி மொழி குழுவினர் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ஆய்வுக்கு வந்தனர் அப்போது சுங்க சாவடியை கடந்து செல்ல உறுதி மொழி குழுவினர் (சட்டமன்ற உறுப்பினர்) நின்ற போது சுங்கக்கட்டணம் கேட்டுள்ளனர்.

வாகனங்களில் வந்திருப்பவர்கள் அனைவரும் எம் எல் ஏ க்கள் எனவும் அரசு அதிகாரிகள் எனவும் கூறியுள்ளனர்.இந்த நிலையில் அனைத்து வாகனங்களும் கட்டணம் செலுத்தி தான் செல்லவேண்டும் எனவும் எலக்ஸம்ஷன் இல்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .எம் எல் ஏக்களுக்கு இலவசமாக செல்ல பாஸ் வழங்கபட்டும் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டும் என கூறி சுங்க சாவடி ஊழியர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சென்னை அண்ணா நகர் எம் எல் ஏ மோகன் காரை நகர்த்த முற்பட்ட போது சுங்க சாவடியில் உள்ள தடுப்பு கட்டையை கொண்டு காரின் மீது இடித்ததில் காரின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.மேலும் இது தொடர்பாக பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர்  வேல்முருகன் தலைமையிலான உறுதி மொழி குழுவினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் மற்றும் மாவட்ட எஸ் பி மோகன் ராஜ் தலைமையிலான போலீசார் சுங்க சாவடிக்கு சென்றனர்.

அங்கு சுங்க சாவடியை முற்றுகையிட்டு பேச்சுவார்த்தை நடத்திய போது சுங்க சாவடி மேலாளர் மற்றும் ஊழியர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் ,சுங்கச்சாவடி நடைமுறை படுத்த கூடாது என கூறிய நிலையில் இந்த சுங்க சாவடி நிர்வாகம் அனுமதியின்றி செயல்பட்டு வருகிறது எனவும் இதனை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என பேசினார் மேலும் இன்று ஒரு நாள் முழுவதும் உறுதிகுழு திரும்பி செல்லும் வரையில் இலவசமாக சுங்கச்சாவடியில் வாகனங்கள் பயணிக்க உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *