உணவின்றி கஷ்டப்பட்ட மாற்றுத்திறனாளியின் குழந்தைகளை மீட்ட அரசு..!

பள்ளப்பட்டி அருகே குல்லலக்குண்டில் போதிய உணவின்றி நோய்வாய்பட்ட மாற்றுத்திறனாளி தம்பதிகளின் குழந்தைகளை மீட்ட அரசு அதிகாரிகள் 

கொடைரோட்டை அடுத்த பள்ளபட்டி குல்லலக்குண்டு கிராமத்தில், வருமானமின்றி தவித்த மாற்றுத்திறனாளி தம்பதிகளின் குழந்தைகளுக்கு போதிய உணவு வழங்க முடியாததால் நோய்வாய்ப்பட்ட நிலையில் காவல்துறை உதவியுடன் மீட்ட சமூகநலத்துறை அதிகாரிகள்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த பள்ளப்பட்டி அருகே குல்லலக்குண்டு கிராமத்தில் நாகராஜ்-தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர், இருவரும் மாற்றுத்திறனாளிகளான இவர்கள் இருவர்களுக்கு மூன்று வயதில் ஒரு குழந்தையும் மற்றும் ஆறுமாத கைக்குழந்தையும் உள்ளது, இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக போதிய வருமானம் இல்லாததால் குழந்தைகளை சரிவர பராமரிக்க முடியாமல்,போதிய சரிவிகித உணவு கொடுக்க முடியாமல் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் முதல் குழந்தை நோய்வாய்ப்பட்டு மெலிந்து ஆபத்தான நிலையில் இருந்து, அதே போது பிறந்த போது மூன்று கிலோ எடை இருந்த இரண்டாவது குழந்தை ஆறுமாதமாக போதிய உணவு இன்றியும் தாய்பால் இன்றியும் அரை கிலோ அளவிற்கு எழும்பும் தோழுமாக வற்றி மெலிந்து இறக்கும் நிலையிலிருந்தது, 

இது குறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலினடிப்படையில், மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி புஷ்பகலா மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சிவகுமார், நிலக்கோட்டை வட்டாட்சியர் தனுஷ்கோடி ஆகியோர் அம்மையநாயக்கனூர் காவல்துறை ஆய்வாளர் குமரேசன் உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்று இரு குழந்தைகளையும் மீட்டனர்.

அப்போது குழந்தைகளை மீட்க விடாமல் பார்வைத் திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளியான குழந்தைகளின் தந்தை வீட்டிற்குள் மண்ணெய்யை ஊற்றி எரித்து தற்கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது,உடனடியாக சுதாரித்த காவல்துறையினர் தக்க சமயத்தில் குழந்தைகளை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர் இதனால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *