நிலத்தை அளவீடு சர்வேயரை செருப்பால் அடித்த அதிமுக முன்னாள் கவுன்சிலர்..!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூர்  பகுதியை சார்ந்த மணிகண்டன் என்பவருக்கும் சின்னபுரங்கணி  கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம், சீத்தாபதி ( முன்னாள் அஇஆதிமுக கவுன்சிலர்), சரவணன் ஆகியவர்களுக்கும் இடையே நில உரிமை சம்பந்தமான பிரச்சனை பல ஆண்டுகளாக இருந்து வருகின்றது. மணிகண்டன் இதற்கான தொடர்ந்த வழக்கும் நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில். 

நிலத்தை அளவீடு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து காவல்துறையின் பாதுகாப்போடு முறையாக  சம்பந்தப்பட்ட இடத்தை  அளப்பதற்காக  அரசு சர்வேயரால்  காவல் துறையில்  பாதுகாப்பு வேண்டி மனு அளித்தார் மணிகண்டன். காவல்துறை  சின்னபுரங்கணி கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் இந்த பகுதியின் நில அளவீட்டாளர் மகேஸ்வரன் மற்றும் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட கடலூர் மாவட்டம் சின்னப் புறங்கணி கிராமத்திற்கு அளவீடு செய்வதற்காக சென்ற பொழுது அங்கு சீத்தாபதி  மற்றும் அவருடைய மனைவி. மைத்துனர் மற்றும் ஆதரவாளர்கள் இந்த இடத்தை அளக்க கூடாது இந்த பகுதிக்கு வரக்கூடாது வெளியேறுங்கள் என்று அலுவலர்களை மிரட்டி  தகாத வார்த்தைகளில் பேசினர். 

அதற்கு நில அளவீட்டாளர் நான் முறைப்படி நீதிமன்ற உத்தரவு மற்றும் காவல்துறையோடு வட்டாட்சியர் உத்தரவுப்படி அளவீடு செய்ய வந்திருக்கிறேன் எந்த விஷயமாக இருந்தாலும் நீங்கள்  முறைப்படி அதிகாரிகளிடம்  பேசிக் கொள்ளுங்கள் என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த சீத்தாபதி தகாத வார்த்தைகளில் திட்டி அவர் போட்டிருந்த செருப்பை கழட்டி சர்வெயரை அடித்தார். 

உடனடியாக காவல்துறையினர் இருவரையும் சமாதானப்படுத்தினர். இது சம்பந்தமாக காடாம்புலியூர் காவல் நிலையத்தில் சர்வேயர் அளித்த புகாரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சர்வேயரை அதிமுக முன்னாள் கவுன்சிலர் செருப்பால் அடித்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *