துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்றவர்களில் ஒருவர் பலி; சோதனைச் சாவடிக்கு தீ வைப்பு…!

ஓசூர் அருகே துப்பாக்கியுடன் வேட்டை சென்றவர்கள் மூவரில் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு , வனத்துறை சோதனைச் சாவடிக்கு தீ வைப்பு சாலை மறியல்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகே அட்டப்பலம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் வயது 45 மற்றும் கூட்டாளிகளுடன் இன்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் துப்பாக்கியுடன் வனப்பகுதியில் வேட்டைக்கு சென்றுள்ளனர்

இதைக் கண்ட வன ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை தடுத்து நிறுத்தினர் ஆனால் நிறுத்தாமல் அவர்கள் வனப்பகுதிக்குள் வேகமாக சென்றுள்ளனர்,சிறிது நேரத்தில் நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளனர் இதில் இருவர் துப்பாக்கியுடன் காட்டிற்குள் ஓடிவிட்டனர் ஒருவர் புதருக்குள் ஓடி மறைந்துள்ளார் 

அவரைப் பிடித்த வனத்துறையினர் விசாரணையில் அவர் வெங்கடேஷ் என தெரியவந்தது அவர் பதற்றம் காரணமாக தண்ணீர் கேட்டுள்ளார் தண்ணீர் கொடுத்தபடி உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்துள்ளனர்,சம்பவ இடத்திற்கு சென்ற மருத்துவ குழுவினர் வெங்கடேஷை தேன்கனிக் கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்து உள்ளார்

வெங்கடேஷ் இறப்பில் மர்மம் இருப்பதாக தெரிவித்த அப்பகுதி மக்கள் வனத்துறை அலுவலகத்தை சூறையாடி தீ வைத்து எரித்துள்ளனர் மேலும் வனத்துறையை கண்டித்து ஊர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்

சம்பவ இடத்தில் போலீசார் மற்றும் வனத்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்,அப்போது கிராம் மக்கள் இறந்தவர் குடும்பத்திற்கு உரிய நிவாரண வழங்க வேண்டும் அங்குள்ள பூ மரத்துகுழி பகுதியுள்ள வன சோதனை சாவடியை அகற்ற வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து சாலை மறியல் கைவிடப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *