ஒன்றியஅரசின் தவறான கொள்கைகளால் விசைத்தறி தொழிலாளர்களுக்கு மாத ஊதியமாக 26 ஆயிரம் வழங்க வேண்டும்

ஒன்றியஅரசின் தவறான கொள்கைகளால் தமிழகத்தில்  பாதிக்கப்பட்டுள்ள  ஏழுலட்சம் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வை மீட்க மாத ஊதியம் 26 ஆயிரம் வழங்க வேண்டும் என மாநில குழு கூட்டத்தில் தீர்மானம்

தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலக்குழு கூட்டம்  ஆண்டிபட்டியில் நடைபெற்றது ஆண்டிபட்டி சிஐடியு தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு  சம்மேளனத்தின்  மாநிலதலைவர் முத்துச்சாமி தலைமை தாங்கினார். 

கூட்டத்தில் மாநில  பொதுச்செயலாளர் சந்திரன் ,  மாநிலப்பொருளாளர் அசோகன் உள்ளிட்ட அனைத்து மாநிலக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் கூட்டத்தில் ஒன்றிய அரசின் தவறான கொள்கைகள் காரணமாக தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் வசிக்கும் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி  தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டித்தும்

அழிந்துவரும் விசைத்தறி தொழிலை பாதுகாக்க ஒன்றிய அரசு  உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், கடுமையாக உயர்ந்துவரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும் வேலையில்லாமல் தவிக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கக்கோரியும்

குறைவான ஊதியத்தால் வாழ வழியில்லாமல் கடன்வாங்கி கந்துவட்டிக்கு வாங்கி அதை திருப்பிக்கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடைபெறுவதை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விசைத்தறி தொழிலாளர்களை பாதுகாக்க எட்டு மணிநேர வேலைக்கு மாதம் ஊதியம் 26 ஆயிரம் வழங்க வேண்டும் அவர்களுக்கு 8 ஆயிரம்  ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஒன்பதாம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து  சென்னையில் நடைபெற உள்ள மாபெரும் போராட்டத்தில்  தொழிலாளர்கள் அனைவரும் பங்குபெற வேண்டும். அதையடுத்து வருகின்ற 14ஆம் தேதி மோடி அரசின் மக்கள்விரோத நடவடிக்கைகளை  கண்டித்து சிஐடியு தொழிற்சங்கம் மற்றும் விவசாய சங்கங்களும் இணைந்து விடியலை நோக்கி இந்தியா என்ற தலைப்பில் விடிய விடிய நடைபெற உள்ள போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் 

அரசு நிறுவனங்களின் நிரந்தர தன்மையை பாதிக்கும் தமிழகஅரசின் அவுட்சோர்சிங்  முறையை கைவிட வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *