உச்சத்தை தொட்ட ஏலக்காய் ஒரு கிலோ ரூ.2,300-க்கு விற்பனை.

தேனி மாவட்டம் போடி யில், குரங்கணி சாலையில் ஏலக்காய் நறுமண பொருட் கள் விற்பனை வாரியம் செயல்பட்டு வருகிறது.தமிழ் நாட்டில் தேனி மாவட்டம், கேரளாவில் இடுக்கி மாவட் டத்தில் விளையும் ஏலக்காய் கள். இந்த வாரியத்துக்கு கொண்டு வரப்பட்டு ஆன் லைன் ஏல அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தநிலையில் நடப்பாண் டில் விளைந்த ஏலக்காய் களை விற்பனைக்காகபோடி ஏலக்காய் நறுமண வாரியத் தில் விவசாயிகள், வியாபாரி கள் பதிவு செய்தனர். அதன் படி, நேற்று ஒரே நாளில் 75 டன் ஏலக்காய்கள் விற்ப னைக்கு வந்தன. பின்னர் ஆன்லைன் மூலம் ஏலக்காய் விற்பனை ஏலம் நடைபெற் றது. இதில், முதல்தர ஏலக் காய் கிலோ ரூ.2,300-க்கு விற்ப னையானது. சராசரி ஏலக் காய் ஒரு கிலோ ரூ.1,600-க்கும் விற்பனையானது கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதல்தர ஏலக்காய் கிலோ ரூ.1,600-க்கும், சராசரி ஏலக்காய் ரூ.1,100-க்கும் விற்றது. ஆனால் தற்போது அவற்றின் விலை முறையே ரூ.700, ரூ.500 என விலை உயர்ந்துள்ளது.

விளைச்சல் குறைவு: இந்த ஆண்டு ஏலக்காய் அதிகம் விளை யும் கேரள மாநில பகுதி யில் போதிய மழை பெய்ய வில்லை. இதனால் ஏலக் காய் செடிகளில் காய்க்க வில்லை. அதேபோல் அதிக மழை பெய்த சில இடங்களில் ஏலக்காய் செடிகளில் அழுகல் நோய் ஏற்பட்டது. இதுதவிர கேர ளாவில் அதிககாற்று வீசுவ தால், ஏலக்காய் செடிகள் ஒன்றோடு ஒன்று உரசி ஏலக்காய்களும், பிஞ்சு களும் உதிர்ந்து வருகிறது. இதனால் ஏலக்காய் விளைச்சல் குறைவாக உள் ளது. 

இந்த சூழ்நிலையில் எதிர்கால லாபத்தை கணக்கிட்டு கூடுதல் விலைக்கு ஏலக்காய்களை வியாபாரிகள் கொள்முதல் செய்து இருப்பு வைத்து வருகி றார்கள். இன்னும் வடமாநில ஏலக்காய் வியாபாரிகள், ஏற் றுமதியாளர்கள் ஆகியோ ருக்கு ஏற்றுமதி ஆர்டர் கிடைக்கவில்லை. கிடைத்த தும் இங்கு வந்து அதிக அள வில் ஏலக்காய்களை கொள் முதல் செய்வார்கள். அப் போது ஏலக்காய் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு விலை உயர்ந்து வரும் நிலையில் மொத்த கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ஏலக்காய்களை தரம் வாரியாகபிரித்து வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர் தற்போது போடி சென்னை ரயில் சேவை துவங்கி உள்ள நிலையில் தரம் பிரிக்கப்பட்ட ஏலக்காய் மூடைகளைரயில் மூலம் வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர் இதனால் தென்னக ரயில்வேக்கு வருவாய் கிடைக்கின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *