மருதுசேனை அமைப்பின் பொருளாளர் கொலையில் இருவர் கோர்ட்டில் சரண்…!

விருதுநகரில் மருதுசேனை அமைப்பின் பொருளாளர் குமரவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சேலம் சங்ககிரி காவல்நிலையத்தில் சரணடைந்த பால்பாண்டி , செல்வம் ஆகிய இருவரை கைது செய்தனர். விருதுநகரில் முன் விரோதம் காரணமாக பழிக்கு பழி சம்பவமாக மருது சேனை அமைப்பின் மாநில பொருளாளர் குமரன் என்கிற குமரவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

 தடுத்த உறவினர் பெண் ரூபி, மற்றும் ராம்குமார் ஆகியோரை அரிவாளால் வெட்டி விட்டு 8 பேர் கொண்ட கும்பல் தப்பிச் சென்றனர். மதுரை மாவட்டம்  மையிட்டான்பட்டியை சேர்ந்த வினித் என்பவரை மருது சேனை அமைப்பின் நிறுவன தலைவர் ஆதி நாராயணன் மற்றும் குமரவேல் தரப்பினர் இணைந்து காரைக்குடியில் வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதில் ஆதி நாராயணன் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர். 

ஆனால் குமரன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்யவில்லை. இதனால் வினித் தரப்பினர் கடும் ஆத்திரத்தில் இருந்தாக கூறப்படுகிறது. இச் சூழலில்  விருதுநகர்  மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள பழ கமிஷன் மண்டியில் இருந்த குமரன் (46), அவரது உறவினர் ரூபி (42), ஆதி நாராயணனின் மருமகன் ராம்குமார் இருந்துள்ளனர். அப்போது இரு சக்கர வாகனங்களில் வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் மூவரையும் அரிவாளால் வெட்டி விட்டு, தப்பி விட்டனர். 

தகவல் அறிந்த மேற்கு போலீஸார், மூவரையும் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவிக்கு பின்,மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குமரவேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக ரூபி கொடுத்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் பால்பாண்டி என்ற பவர் பாண்டி, அரவிந்தராஜ் என்ற சேவு,  சேகர் என்ற சந்திரசேகர், ஞானசேகரன், விக்ரமன், அமிர்தசங்கர், அமிர்தராஜ்,  ஹரிஹரன், சிவப்பிரகாஷ்  மற்றும் அடையாளம் தெரியாத 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க 4 பேர் ஆகிய 15 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இக்கொலை வழக்கில் சேலம் சங்ககிரி காவல்நிலையத்தில் சரணடைந்த பால்பாண்டி , செல்வம் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களை விருதுநகர் மேற்கு காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் விருதுநகர் குற்றவியல் நீதித்துறை நடுவர் கவிதா முன் ஆஜர்படுத்தினர். அவர் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்களை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *