என்எல்சி நிறுவன பணிகளுக்கு பாமக எதிர்ப்பு… திடீர் சாலை மறியல்

என்எல்சி நிறுவன பணிகளுக்கு பாமக எதிர்ப்பு. வளையமாதேவி கிராமத்திற்குள் செல்ல போலீஸ் அனுமதி மறுப்பு. சேத்தியாத்தோப்பு பகுதியில் பாமகவினர் திடீர் சாலை மறியல். 50 க்கும் மேற்பட்டோர் பேர் கைது

சிதம்பரம் அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி நிறுவனம் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இன்று வடிகால் வாய்க்கால் வெட்டும் பணியில் ஈடுபட்டது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் விழுப்புரம் சரக டிஐஜி தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

போலீஸ் பாதுகாப்புடன் 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வாய்க்கால் வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் என்எல்சி நிறுவனத்தின் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் அக்கட்சியினர் ஒன்று திரண்டனர். பின்னர் என்எல்சி நிறுவன பணிகள் நடைபெறும் வளையமாதேவி கிராமத்திற்கு செல்ல முயன்றவர்களை சேத்தியாத்தோப்பு குறுக்கு சாலை பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது பாமகவினர் போலீசாரிடம் விவசாய பணிகள் நடைபெற்று வருவதால் பணிகளை நிறுத்த வேண்டும் என கூறினர். ஆனால் போலீசார் அதற்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து பாமக மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் சென்னை – கும்பகோணம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  அப்போது என்எல்சி நிறுவனத்திற்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை. எழுப்பினர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 50க்கும் மேற்பட்ட பாமகவினரை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *