ஆசிய ஹாக்கியின் சின்னம்…கம்பீரமான யானைக்கும் பாகனுக்கும் கிடைத்த பெருமை… 

அடுத்த மாதம் சென்னையில் துவங்கும் ஆசிய அளவிலான ஹாக்கி போட்டியின் விளம்பரம் மற்றும் போட்டியின்  சின்னமாக ஆஸ்கர் படத்தில் நடித்த யானை உருவம் மற்றும் யானை பாகன் பெயர் இடம் பெற்றிருப்பது யானைகளுக்கும், பாகனங்களுக்கும் பெருமை சேர்ப்பதாக என வனத்துறை முதன்மைச் செயலாளர் சமூக வலைதளத்தில் பதிவு.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம்  ஆசியாவிலேயே நூற்றாண்டு ஆண்டுகளை கடந்த பழமை வாய்ந்த காப்பகம் ஆகும். இங்குள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் சுமார் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. 

குறிப்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரி வனப்பகுதியில்  இருந்து தாயைப் பிரிந்து சுற்றி திரிந்த பிறந்து 11 மாதங்கள் ஆன ரகு என்ற குட்டி யானையும்,  சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து தாயிடமிருந்து பிரிந்த 5 மாதங்களான  பொம்மி யானையையும் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்பட்டு தொடர்ந்து பராமரித்து வந்தனர்.

இந்த யானையை பராமரிப்பதற்காக  கணவன் மனைவியான பொம்மன் மற்றும் பெள்ளி என இரு பாகன்கள் பணியார்த்தப்பட்டு இருவரும் இந்த யானைகளை பராமரித்து, வளர்த்து வந்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டு முதுமலை தெப்பகாடு  புலிகள் காப்பக யானைகள் முகாமில் உள்ள ரகு ,பொம்மி என்ற இரு யானைள் மற்றும் இதனை பாதுகாத்து வளர்த்த பொம்மன் பெள்ளி ஆகியோரை வைத்து யானை குட்டிகளை பராமரித்து வளர்ப்பது குறித்த  The Elephant Whisperers என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது.

சமீபத்தில் இந்த ஆவணப்படம் ஆஸ்கர் விருது பெற்றது. விருது பெற்றது முதல் பிரதமர், குடியரசு தலைவர், முதலமைச்சர் வரை அனைவரிடத்திலும் படத்தை இயக்கிய கார்த்தகி கன்சாவுலஸ், படத்தில் நடித்த தம்பதிகள் 2 யானைகள் என அனைவரும் வாழ்த்து பெற்று வந்தனர். இந்த நிலையில் அடுத்த மாதம் 3-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள ஆசிய அளவிலான ஹாக்கி பந்தயத்திற்கு விளம்பரம் மற்றும் சின்னம் அறிவிக்கப்பட்டது. இதில் ஆஸ்கர் படத்தில் நடித்த யானை போன்ற உருவமும் அதன் டீ-சர்ட்டில் யானைகளை பராமரித்த பொம்மன் என்பவரின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

 இந்த காட்சிகளை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இது கம்பீரமான யானைகளுக்கும், பாகனங்களுக்கும் கிடைத்த பெருமை என வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகூ பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *