கோவில் அறங்காவலர் நியமனத்திற்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை

Madurai High Court

மனு குறித்து இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பதிலளிக்கவும் மதுரை கிளை உத்தரவு சிவகங்கை மாவட்டம் ஒ.சிறுவயல் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு,

மனுவில், தான் சிவகங்கை மாவட்டம் ஒ.சிறுவயல் சாலி கிராம பகுதியில் வசித்து வருகிறேன் எங்கள் கிராமத்தில் உள்ள ஐனூற்றி  பிள்ளையார் எனும் சாலி பிள்ளையார் கோவில் பிரசித்திபெற்றது. இந்த கோவிலின் நிர்வாக அறங்காவலராக இருந்து வருவதாகவும், இந்தக்கோவிலை பரம்பரை பரம்பரையாக தங்களது சமூகத்தை சேர்ந்தவர்கள் நிர்வகித்து வருவதாகவும், 6 குடும்பங்களை சேர்ந்த தங்களின் பரம்பரையினர் சுழற்சி முறையில் கோவிலை நிர்வாகம் செய்வதோடு, சொந்த பணத்தை பயன்படுத்தி கோவிலை பராமரித்து வருகின்றோம் இந்த கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு கீழ் வராது.

தொடர்ச்சியாக எங்கள் சமூகம்  நிர்வகித்து வரும் இந்த  கோவில் மீது இந்துசமய அறநிலையத்துறை தலையீடு செய்யது கோவில் அறங்காவலர் நியமிக்க  முயற்ச்சிக்கின்றனர், ஆனால் எங்கள் கோவில் 1976ல் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி தங்கள் கோவில் மதம் சார்ந்த பொது வழிபாடு தளம் இல்லை   என விண்ணப்பம் செய்து அது சம்மந்தப்பட்ட துறையால் ஏற்கப்பட்டது.

இந்நிலையில் சிவகங்கை இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்பாளர் எங்கள் கோவிலை இந்து சமய அறநிலை துறையின் கீழ் தக்கர் நியமிக்க அரசு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். அறங்காவலர்களை நியமிக்க கோவிலின் அசையா மற்றும் அசையும் சொத்து மதிப்புகள் கேட்கப்படுகின்றன.

எனவே, ஐனூற்றி  பிள்ளையார் கோயிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர்களை நியமிப்பதற்கு தடை விதித்து  உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் இந்து அறநிலையத்துறை 1976 ஆம் ஆண்டு அறிவிப்பாணையை மற்றும் பொது வழிபாட்டு தளம் இல்லை என்ற ஒப்பந்ததை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இதனை பதிவு செய்த நீதிபதி  கோவிலுக்கு அறங்காவலர் நியமிக்கும் நடைமுறைக்கு இடைக்கால தடைவிதித்து சிவகங்கை மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *