கோவில் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு…!

Nadarajar temple

முத்துப்பேட்டை அருகே வடசங்கேந்தி கிராமத்தை சேர்ந்த சிவ சங்கரன் (35) என்பவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கும்பகோணம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு.

முத்துப்பேட்டை அருகே வடசங்கந்தி கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கரன் மற்றும் அவரது உறவினர்கள் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று விட்டு இன்று சொந்த ஊர் திரும்புவதற்காக கும்பகோணம் பேருந்து நிலையத்திற்கு இன்று மதியம் வந்தனர் .

அப்போது சிவசங்கரன் கட்டுப்பாடுகளை எல்லாம் மீறி குடும்பத்தாரை பிரிந்து வேகமாக ஓடியுள்ளார். அவரைப் பின் தொடர்ந்து வந்த குடும்பத்தினர் ஓர் அளவிற்கு மேல் செல்ல முடியாமல் நின்ற நிலையில், ஓடிய சிவசங்கரன் ஏகாம்பரேஸ்வரர் கோவில் கோபுரத்திற்கு ஏறி உள்ளார்.

உறவினர்கள் கோவிலுக்குள் வந்து தேடிப் பார்த்தபோது.  ஓடி வந்தவர் கோபுரத்தின் மேல் ஏறியதாக தெரியவந்தது . இதனை தொடர்ந்து இவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர். இதனை தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு வரவழைக்கப்பட்டனர்.

அதற்குள் ஏராளமானவர்கள் கோவிலில் கூடினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் காவல் துறையினர் கோபுரத்துக்குள் பதுங்கி இருந்த சிவசங்கரனை மீட்டு கோபுரத்தில் இருந்து கயிறு மூலம் கீழே இறக்கினர். இதனை தொடர்ந்து கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரிடமும் அவரது குடும்பத்தாரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது .

முதல் கட்ட விசாரணையில், தொடர்ந்து குடிப்பழக்கத்தில் இருந்த சிவசங்கரன் மனதை மாற்ற விரதமிருந்து மேல்மருவத்தூர் கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக சரியான உணவு இல்லாமலும், தூக்கம் இல்லாததாலும் இன்று மதியம் மனநிலை தடுமாறிய நிலையில் சிவசங்கரன் இது போல் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஏகாம்பரேஸ்வரர் கோவில் கோபுரத்தில் ஏறிய நபர் தற்கொலை செய்து கொள்வதாக தகவல் பரவியதும்  அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

ஏகாம்பரேஸ்வரர் கோவில் கோபுரத்தில் இருந்து சிவசங்கரை மீட்கும் போதுகையில் கத்தி இருந்துள்ளது. கோபுரத்தின் மேல் ஏறிய நபருக்கு கத்தி எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *