மர்ம வியாதியால் டோலி கட்டி மருத்துவமனைக்கு தூக்கி செல்லும் அவல நிலை…!

தெலுங்கானாவில் மலை கிராமங்களில் மர்ம வியாதி பரவி வரும் நிலையில் கிராம மக்கள் போதிய சாலை வசதி இல்லாமல் டோலி கட்டி மருத்துவமனைக்கு ஆர்பரித்து செல்லும் ஆற்றின் நடுவே தூக்கி செல்லும் அவல நிலை

உலகம் விஞ்ஞான வளர்ச்சியால் அனைத்து துறையிலும் அதிதித வளர்ச்சி பெற்று வருகிறது.   மனிதன் நிலவில் காலடி எடுத்து வைக்கும் நாட்களை நோக்கி செல்லக்கூடிய நிலையில்  கிராமப்புற மக்கள் மட்டும் போதிய வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.

தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டம், வெங்கடாபுரம் மண்டலம், போடாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சீதாராம்புரம் கிராமத்தில் மர்ம நோய் பரவி வருகிறது. இதனால் வாந்தி மயக்கம் சோர்வால் பாதிக்கப்படுகின்றனர். அவ்வாறு குரசம் பாபுராவ் என்பவருக்கு வாந்தி பேதி ஏற்பட்டதால்   மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல்   இறந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்   அதே ஊரை சேர்ந்த லட்சுமையா வாந்தி, பேதியால் அவதிப்பட்டு வந்தார்.  

லட்சுமையாவை அவசர சிகிச்சைக்காக  அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், போதிய வசதி இல்லாததால் கிராம மக்கள் ஒரு  கட்டையில்  போர்வைக்கு மத்தியில்  லட்சுமையாவை படுக்க வைத்து டோலியாக அமைத்து அதில் பலர் சுமந்தபடி ஓடையை கடந்து சென்று மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சீதாராமபுரத்தில் இருந்து, அலுபாக்கத்தின் நடுவே உள்ள ஜின்னெலவாகு நான்கு நாட்களாக பெய்த மழையால் ஓடையில் வெள்ளநீர் ஆர்பரித்து செல்கிறது. 

சீதாராம்புரம் பழங்குடியினர் கிராமத்தில் பல வீடுகளில் மர்ம காய்ச்சல் பாதிப்புகள் இருப்பதாக கிராம மக்கள் கூறினாலும்  மோசமான நிலை இருந்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *