‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டத்திற்கான இடத்தை அமைச்சர்கள் ஆய்வு…!

Ma subramanian

தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் புதுக்கோட்டையில் நடப்போம் நலம் பெறுவோம் எனும் நோக்கில் பொதுமக்கள் 8 கி.மீ. தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை தமிழ்நாடு அமைச்சர்கள் ரகுபதி, மா.சுப்பிரமணியன், மெய்யநாதன்  ஆகியோர் ஆய்வு, 

8 கிமீ தூரத்திற்கு நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்ட மா.சுப்பிரமணியனிடம் பல்வேறு இடங்களில் கோரிக்கைகளை சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் எடுத்துரைத்தனர். மேலும் இதில் எம்எல்ஏ முத்துராஜா, ஆட்சியர் மெர்சி ரம்யா, எஸ் பி வந்திதா பாண்டே, கல்லூரி மாணவ மாணவிகள் உள்ள 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

நடப்போம் நலம் பெறுவோம்’ என்ற நோக்கத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 8 கிலோ மீட்டர் தூரம் கொண்ட நடைபாதைகள் கண்டறியப்பட்டு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் நடைபாதைகள், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து 8 கி.மீ தூரம் கொண்ட நடைபாதை உருவாக்கப்படும். சுகாதார பணியாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அங்கு சுகாதார நடைபயிற்சியில் பங்கேற்பார்கள். 

நடைபயிற்சியின் முடிவில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற மருத்துவத்துறை மானிய கோரிக்கையின் போது அத்துறை அமைச்சர் மா. சுபிரமணியன் அறிவித்திருந்தார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் நடப்போம் நலம் பெறுவோம் என்ற நோக்கில் நடை பயிற்சி மேற்கொள்ள எட்டு கிலோமீட்டர் தூரம் இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை நகராட்சியில் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் எனும் நோக்கில் பொதுமக்கள் 8 கி.மீ. தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன்  ஆகியோர் ஆய்வு செய்தனர். 

மேலும் 8 கிலோமீட்டர் நடந்து சென்ற அமைச்சர் மா சுப்பிரமணியனிடம் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தன்னார்வலர்கள் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினர். மேலும் இதில் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா, மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், கல்லூரி மாணவ மாணவிகள் பல்வேறு துறை அதிகாரிகள் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மேலும் இந்த நடைபயிற்சி சென்ற இடத்தின் பல்வேறு பகுதிகளில் மருத்துவ முகாம்கள் ஆங்காங்கே தண்ணீர் பாட்டில்கள் 108 ஆம்புலன்ஸ் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

மேலும் இந்த நடைபயிற்சியானது புதுக்கோட்டை திலகர் திடலில் தொடங்கி பால்பண்ணை ரவுண்டானம், பிஎல்ஏ ரவுண்டானம், கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி ரவுண்டானம், பிச்சிந்தாம்பட்டி ரவுண்டானம், மாலையீடு வரை சென்று பின்னர் அதே வழியில் மீண்டும் திலகர் திடலில் நிறைவடைந்தது. 

மேலும் இந்த நடைப்பயிற்சியின் போது கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானத்திற்குள் சென்ற அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் அங்கு நடைபயிற்சி மேற்கொண்டவர்களோடு இணைந்து நடைப்பயிற்சி மேற்கொண்டதுடன் அங்கு இருந்தவர்களிடம் கோரிக்கைகளையும் கேட்டறிந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *