சதுரகிரி மலை கோவிலில் பயங்கர காட்டுத்தீ… நடுவழியில் சிக்கிக்கொன்ட பக்தர்கள்…!

ஶ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி கோவிலுக்கு  2 வது நாளாக  காட்டுத் தீ., தீ ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளதால் பக்தர்கள் கீழே இறங்கி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில்.இந்த கோயிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது . இத்திருக்கோவிலில் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறார். மேலும் 18 சித்தர்களும் இங்கு வாழ்ந்து வழிபட்டு வருவதாக கூறப்படுவதால் இது சித்தர்களின் சொர்க்க பூமி என அழைக்கப்படுகிறது.

இத்திருக்கோவிலுக்கு செல்வதற்கு மதுரை மாவட்டம் சாப்டூர், விருதுநகர் மாவட்டம் தாணிப்பாறை ஆகிய இரு வழிகள் இருந்தாலும் பிரதான வழியாக விருதுநகர் மாவட்ட வழியாக செல்லும் தாணிபாறை பாதையையே பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு முன்பு வருடம் முழுவதும் திருக்கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில் வெள்ளப்பெருக்கிற்க்கு பின் மாதம் தோறும் பிரதோஷம், சிவராத்திரி அமாவாசை, பௌர்ணமி, ஆகிய தினங்கள் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று ஆடி மாத பிறப்பு அமாவாசை தினத்தை முன்னிட்டு  சுமார் 13 ஆயிரம் பக்தர்கள் வரை கோயிலுக்கு சென்று சதுரகிரி சுந்தர மகாலிங்கத்தை வழிபட்டனர்.பின்னர் அவர்கள் மலைப்பகுதியில் தங்க அனுமதி இல்லாததால் கீழே இறங்கினர். இந்நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் நாவல் ஊத்து பகுதியில் பயங்கர காட்டுக்கு ஏற்பட்டது.

இதில் பக்தர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும்,  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்  மலைப் பகுதியிலேயே தங்க வைக்கப்பட்டனர். மேலும்தீயை அணைக்கும் பணியில் 30 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இன்று 2 நாளாக மலைப் பகுதியில் காட்டுத் தீ எரிந்து வருவதால் இன்று பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என்பது மறுக்கப்பட்டது இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். தற்போது தீயானது ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் பக்தர்கள் கீழே இறங்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *