2 கோடி 24 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை… அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள 2 கோடி 24 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்குகான விண்ணப்பங்கள் வழங்கப்படும் – கிருஷ்ணகிரியில் அமைச்சர் சக்கரபாணி தகவல் ..

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சரயு தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு அரசின் திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 

இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் சக்கரபாணி தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அந்த திட்டங்களை கொண்டு சென்று சேர்க்கும் பணியில் அதிகாரிகள் முக்கிய பங்கு வருகிறீர்கள். தமிழக மட்டுமல்ல நாட்டிற்கு முன் உதாரணமாக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது இதனால் தமிழகம் வளர்ச்சி திட்டங்களில் முன்னேறி வருகிறது அந்த வகையில் தற்போது செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாள் என்று தமிழக அரசு புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது 

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் துவங்கப்பட உள்ளது இதற்காக வருகின்ற 20ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது தமிழகத்தில் உள்ள இரண்டு கோடியே 24 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி விண்ணப்பங்கள் தரப்பட்டு அதில் தகுதியான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். 

இந்த திட்டத்தில் முறையான தகுதி இருந்தும் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தால் அந்த பெண் அருகே உள்ள வருவாய் கோட்டாட்சியரிடம் எழுத்துப்பூர்வமாக தகுந்த ஆவணங்களுடன் மனு அளிக்கலாம் அவரது மனு ஒரு மாத காலத்திற்குள் பரிசீலனை செய்யப்பட்டு முறையான தகுதி இருந்தால் அவருக்கு கலைஞர் மகளின் உரிமை தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்தத் திட்டத்தில் தகுதியான பெண்கள் அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை சென்றடைய வேண்டும் என்பதே முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் விருப்பம் அதன்படி இந்த திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி துவங்கப்பட உள்ளது. அரசு அலுவலர்கள் அதிகாரிகள் இந்த திட்டத்தை திறம்பட செயல்பட முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *