மதுரையில் தடையை மீறி பட்டாசு வெடித்ததில் முதியவர் கண் பார்வை இழப்பு…!

உசிலம்பட்டியில் தடையை மீறி பட்டாசு வெடித்ததில் – ஆட்டோவில் பயணித்த முதியவரின் கண்ணில் பட்டாசு துகள் பட்டு கண் பார்வை இழந்த சோகம் – அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்களுடன் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதியில் பட்டாசு வெடிக்க நகராட்சி கவுன்சிலர்கள் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.,

இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி பேரையூர் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த விழாவிற்காக பட்டாசு வெடித்ததில், ஆட்டோவில் பயணித்து வந்த வி.பெருமாள்பட்டியைச் சேர்ந்த முத்தையா என்ற முதியவரின் கண்ணில் பட்டாசு துகள் பட்டு படுகாயமடைந்தார்.,

முத்தையாவிற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரை தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் காயம்பட்ட கண்ணுக்கு செல்லும் நரம்புகள் செயலிழந்துள்ளதால் கண் தெரிய வாய்ப்பில்லை என மருத்துவ குழுவினர் தெரிவித்து இன்று வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.,

இந்த சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் இல்ல விழா நடத்திய மானுத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், பட்டாசு வெடித்த முத்து என்ற இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.,

இந்நிலையில் பட்டாசு வெடிப்பினால் கண் பார்வை இழந்த முதியவர் முத்தையா தனது உறவினர்களுடன், உசிலம்பட்டி நகர் பகுதியில் பட்டாசு வெடிக்க தடை இருந்தும் அமல் படுத்தி நடவடிக்கைகள் எடுக்காத நகராட்சி ஆணையாளர் மற்றும் காவல்த்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கைகள் எடுக்க கோரியும், வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களை கைது செய்ய கோரியும், உரிய இழப்பீடு வழங்க கோரியும் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,

தகவலறிந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் பாதிக்கப்பட்ட முத்தையா மற்றும் அவரது உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து கலைந்து சென்றனர்.,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *