முருகர் கோவில் சாவியை  இந்து சமய அறநிலைத்துறையிடம் ஒப்படைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

காட்பாடி அருகே உள்ள அசரீர் மலை முருகர் கோவிலில் சாவியை  இந்து சமய அறநிலைத்துறையிடம் ஒப்படைக்க பொதுமக்கள் எதிர்ப்பு இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் காட்பாடி ஒன்றிய பெருங்குழு தலைவர் வட்டாட்சியர் ஆகியோரை கிராம மக்கள் திரண்டு வந்து முற்றுகை பரபரப்பு

காட்பாடி அடுத்த 66 புத்தூர் கிராமத்தில் அசரீர் மலையில் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி முருகர் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஊர் பொதுமக்கள் நிர்வகித்து வந்தனர். இந்த நிலையில் இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கடந்த1988 ல் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது

இந்த கோவிலுக்கு தற்பொழுது அறங்காவலர் குழு தலைவராக ராஜம்மாள், அறங்காவலர்களாக மணி, முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டதாக இந்து சமய அறநிலைத்துறையால் அறிவிக்கப்பட்டது இதற்கு அப்பகுதி கிராம மக்கள்  எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில்  காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி கூட்டம் இரண்டு முறை நடைபெற்றது அதில் இரு தரப்பினரும் பேசியும் உடன்பாடு ஏற்படவில்லை. 

இந்த நிலையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் காட்பாடி ஒன்றிய பெருங்குழு தலைவர் வேல்முருகன் ஆகியோர் முருகன் கோவில் சாவியை ஒப்படைக்கும்படி கோவில் நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினர் இதனை அடித்த கிராம மக்கள் திடீரென ஒன்று திரண்டு அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

இதுகுறித்து இந்த சமய அறநிலை துறை அதிகாரிகள் கூறுகையில் கடந்த 1988 ஆம் ஆண்டு 66 புத்தூர் அசரீர் மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் இந்து அறநிலை துறை கட்டுப்பாட்டின் கீழ் வரவழைக்கப்பட்டு அறங்காவலர் குழுக்கள் நியமிக்கப்பட்டனர் கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மீண்டும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஏற்படுத்தப்பட்டனர் தற்பொழுது திமுக ஆட்சியிலும் அறங்காவலர் குழுக்கள் நியமிக்கப்பட்டனர்

ஆனால் 66புத்தூர் கிராம மக்கள் தொடர்ந்து இக்கோவிலை தாங்களே நிர்வாகிக்க வேண்டும் எனவும் மேலும் இதனை இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க முடியாது எனவும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இரண்டு முறை தாலுகா அலுவலகத்தில் அமைதி கூட்டம் நடத்தி சாவியை இன்று ஒப்படைப்பதாக கூறினர் அதனை அடுத்து இன்று சாவியை பெறச் சென்ற எங்களை திடீரென முற்றுகையிட்டு சாவியை ஒப்படைக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்று தெரிவித்தனர்

சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான 20 கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர் இதன் எடுத்து நாளை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் விவகாரம் குறித்து நாளை மூன்றாவது கட்டமாக காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கு பின்பு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர் இந்த சம்பவத்தால் 66 புத்தூர் கிராமத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *