வேங்கை வயல் எட்டு பேருக்கு டிஎன்ஏ பரிசோதனைக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டது…!

டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த வேங்கை வயல் பகுதியைச் சேர்ந்த எட்டு பேருக்கு இன்னும் சற்று நேரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் எடுக்கப்பட உள்ளது

புதுக்கோட்டை வேங்கை வயலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் அறிவியல் பூர்வமாக அணுகி குற்றவாளிகளை கண்டறிய டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் மூலமாக அனுமதி பெற்று 

முதற்கட்டமாக 11 பேருக்கும் இரண்டாம் கட்டமாக 10 பேருக்கும் சம்மன் அனுப்பி டிஎன்ஏ பரிசோதனைக்கு ரத்த மாதிரிகளை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்த நிலையில் முதற்கட்டமாக சம்மன் வழங்கிய 11 பேரில் மூன்று பேர் மட்டுமே ரத்த மாதிரிகள் கொடுத்த நிலையில் மீதமுள்ள எட்டு பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாடினர்.

இந்நிலையில் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் எட்டு பேரையும் இன்று காலை 10 மணிக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டதை தொடர்ந்து இன்னும் சற்று நேரத்தில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சம்பந்தப்பட்ட வேங்கை வயல் பகுதியைச் சேர்ந்த எட்டு பேருக்கும் டிஎன்ஏ பரிசோதனைக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *