30 வருடமாக இழப்பீட்டுக்காக போராடும் பொதுமக்கள்… நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கார்ப்பரேட் நிறுவனம்

கொடைக்கானலில் இயங்கி வந்த “பான்ஸ்  இந்துஸ்தான் யூனி லீவர் லிமிடெட்’ நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு சரியான முறையில் இழப்பீடு தராமல் ஏமாற்றி வருவதாக நிறுவனம் மற்றும் சங்க நிர்வாகிகள் மீது பாதிக்கப்பட்டவர்கள் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட எஸ்பியிடம் புகார் 

 “பான்ஸ்  இந்துஸ்தான் யூனி லீவர் லிமிடெட்’நிறுவனம் கொடைக்கானலில் செயல்பட்டு வந்தது. இங்கு பாதரசத்தைக் கொண்டு தர்மா மீட்டர் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த 591 தொழிலாளர்களுக்கு உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது இதனை அடுத்து 1991 ஆம் ஆண்டு கடும் எதிர்ப்புகளுக்கு இடையே இந்த நிறுவனம் மூடப்பட்டது.  உடல் நலம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் நிறுவனம் நீதிமன்ற உத்தரவுப்படி சரிவர இழப்பீடு வழங்கவில்லை இதனை கண்டித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் உண்ணாவிரதம் மறியல் போன்ற பல கட்ட போராட்டங்கள் நடத்தினர். 

நிறுவனத்தை மூடி 34 வருடங்கள் ஆகியும் இதுவரை பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை இதனால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று  30.06.23 திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர் பின்னர் தங்களது கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் வழங்கினர் தங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *