பழனி முருகன் கோயில் மின் இழுவை ரயிலில் மாற்று திறனாளிகளை ஏற்ற மறுக்கும் நிர்வாக்கத்தினர்…!

Palani

பழனி முருகன் கோயில் மின் இழுவை ரயிலில் முதியவர்கள், மாற்று திறனாளிகளை ஏற்ற அலட்சியம் காட்டும் ஊழியர்கள். படிபாதையில் தவழ்ந்து வந்த முதியவர்.

பழனி கோவிலுக்கு கிருஷ்ணகிரியை சேர்ந்த வயதான பக்தர் ஒருவர் வந்திருந்தார். பழனி மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு கீழே இறங்குவதற்காக மின்இழுவைரயில் ஏற சென்றபோது ஏற்ற மறுத்து அலட்சியமாக ஊழியர்கள் நடந்துகொண்டுள்ளனர். 

உடல்நலம் இல்லாத முதியவரை  மட்டுமாவது மின்இழுவை ரயிலில் ஏற்றி கொள்ளுமாறு உறவனர்கள்  கேட்டும் ஏற்ற அனுமதி மறுத்துள்ளனர். இதனால் படி வழிப்பாதையில் முதியவர் இறங்கியுள்ளார். அப்போது அவரால் முழுமையாக நடக்கமுடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. 

தொடர்ந்து நடக்கமுடியாமல் அவர் தவழ்ந்தபடியே படியில் இறங்கியுள்ளார். இதனை வீடியோ எடுத்து பக்தர் ஒருவர் சமூக வளைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதனை அடுத்து கோயில் பாதுகாவலர்கள் முதியவரை படிப்பாதையில் இருந்து பத்திரமாக கீழே இறக்கினர்.

வயோதிகம், கர்ப்பிணிகள், உடல்நலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரும் சாமி தரிசனம் செய்யும் நல்ல நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட மின்இழுவை ரயில், ரோப்கார் ஆகியவை தற்போது அவர்களுக்கு பயன்படாமல், பணம் படைத்தவர்கள் மற்றும் செல்வாக்கு உள்ளவர்கள் மட்டுமே ஏறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.  பக்தர்களிடம் அலட்சியம் செய்த திருக்கோவில் ஊழியர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை எழுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *