ஐ.. ஜாலி! கொடைக்கானலில் தண்ணீரில் மிதந்துகிட்டே சாப்படலாம்…

தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை முதல் இடத்திற்கு கொண்டு வருவதற்காக முதலமைச்சர் கடினமாக பாடுபடுகிறார் எனவும் கொடைக்கானலிலும் மிதவை உணவகம் ஏற்பாடு செய்ய ப்படும் என சுற்றுலாதுறை அமைச்சர்

கொடைக்கானல் கோடை விழாவிற்கு வருகை தந்த தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களும் சுற்றுலா மேம்பாட்டிற்காக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கொடைக்கானலில் படகு இல்லங்கள், கோக்கர்ஸ் வாக் ஆகிய பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டது. 

சின்ன பள்ளம் பகுதியில் ஹெலிகாப்டர் இறங்கு தளம் ஆய்வு செய்யப்பட்டது. மன்னவனூர் பகுதியில் சாகச சுற்றுலா மையம் ஆய்வு செய்தேன்.  விவசாயிகள்  சாகச சுற்றுலா அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளதாக கூறப்பட்டது. விவசாயிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சுற்றுலா மேம்பட்டால்தான் கிராமப் பகுதிகளும் மேம்படும், பொருளாதாரமும் மேம்படும். கொடைக்கானலுக்கு கடந்த ஆண்டு மட்டும் 55 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். 

இதனால் பொருளாதார மேம்பாடும் அடைந்துள்ளது. கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரி பகுதியில் படகு சவாரி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் .வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களும் ஆய்வு செய்து மேம்படுத்தப்படும். ஒவ்வொரு மாவட்டமாக மாஸ்டர் பிளான் அமைத்து சுற்றுலா மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் பல தொழில் முன்னேற்றங்களை ஏற்படுத்தும். கொடைக்கானலில் படகு இல்லங்கள் , கொடைக்கானல் ஏரி மேம்படுத்தப்படும். 

மிதவை உணவகங்கள் கொடைக்கானலிலும் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா இடங்கள் அனைத்தும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். கொடைக்கானலில்  சுற்றுலா மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கொடைக்கானல் மூணாறு சாலை அமைப்பதற்கு உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *