நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் ஆட்டோ விபத்தில் 2 பேர் பரிதாபமாக பலி…!

திருவள்ளூர் அருகே வாரச்சந்தை  வியாபாரம் முடித்துக் கொண்டு ஆட்டோவில் வீடு திரும்பிய போது சாலை விபத்தில் சிக்கி 2 பெண்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பகுதியைச் சேர்ந்த 5 பெண்கள் இரண்டு ஆண்கள்  உட்பட 7   பேர் நேற்றைய தினம் சுங்குவார்சத்திரம் பகுதியில் நடைபெற்ற வாரச்சந்தையில் பொருட்களை விற்றுவிட்டு இரவு  சுங்குவார்சத்திரத்தில் இருந்து தக்கோலம் நோக்கி  ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது மப்பேடு அடுத்த புதுப்பட்டு  பகுதியில் வந்தபோது நெடுஞ்சாலைத்துறை சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அப்பகுதியில் ஒரு வழிச் சாலையாக மாற்றி  தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருப்பதை அறியாமல் ஆட்டோ ஓட்டுனர் வேகத்தில் ஆட்டோவை செலுத்திய போது சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது சக்கரம் ஏறி இறங்கி பின்னர் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ  மறு திசையில் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதி ஆட்டோ தலைக்குப்புறாக கவிழ்ந்து அப்பளம் போல் நொறுங்கியது.

அதில் ஆட்டோவில் பயணம் செய்த  5  பெண்களில் தக்கோலம் பகுதியைச் சேர்ந்த சிவகாமி 45  தேவி 38 மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இருவரும் உயிரிழந்தனர். மேலும் கஜலட்சுமி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் கலைவாணி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் பூங்கொடி  ஆட்டோ ஒட்டுனர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையிலும் மனோகரன், திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும் 

இருசக்கர வாகன இயக்கி வந்த நபர்  உட்பட 6 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சாலை விபத்திற்கு நெடுஞ்சாலை துறையின் அலட்சியமே  காரணம் என தெரிய வருகிறது.

சாலையின் நடுவே தடுப்புகளில் அமைக்கப்பட்ட இடத்தில் போதிய வெளிச்சம் இல்லாததாலும் மற்றும் தடுப்பு வேலி அமைக்கப்பட்ட இடத்தில்  ரிப்ளெக்டர் ஸ்டிக்கர் ஏதும் ஒட்டப்படாததே  இந்த விபத்திற்கு காரணம் என தெரிய வருகிறது .

வாரச்சந்தை முடித்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது சாலை விபத்தில் சிக்கி கூலி தொழிலாளி பெண்கள் இருவர் உயிரிழந்த  சம்பவம் தக்கோலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *