உடல் சிதறி… மக்கள் பதறி…. செல்போன் எதிரி…

— வெங்கட்ராம்

ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது செல்போன் பயன்படுத்த வேண்டாம் என்று பல்வேறு எச்சரிக்கை பலகைகளும் பல்வேறு விழிப்புணர்வுகளும் ஒவ்வொரு நாளும் நாம் ரயில் நிலையங்களில் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். ஏனென்றால் செல்போன் பேசும்போது நம் கவனம் சிதறி ரயில் வருகிறதா இல்லையா, தண்டவாளத்தை தான் கடக்கிறோமா என்று ஒரு யோசனையும் இல்லாமல் நம் கவனம் சிதறி அலட்சியமாக நாம் தண்டவாளத்தை கடந்து செல்கிறோம்.

இதனால் நம் மூளை ரயில் வருவதைக் கூட அறிய தவறி விடுகின்றது. இதனால் நாம் தினமும் பல்வேறு மரண செய்திகளை செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் கண்டு கொண்டே இருக்கிறோம். இதே போன்ற ஒரு சம்பவம் தாம்பரத்தில் நடந்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த நிகிதா என்ற பெண் படிப்பிற்காக சென்னையில் தங்கி இங்கு உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி சைக்காலஜி படித்துள்ளார். இந்நிலையில் மாணவி நிகிதா தாம்பரம் ரயில் நிலையம் அருகே செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்று உள்ளார். அப்போது கவனம் சிதறி மாணவியை ரயில் வருவதை கவனிக்கவில்லை.

இதனால் எதிர்பாராத விதமாக ரயில் மோதி மாணவி நிகிதா சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். படித்து முடித்து பல்வேறு மனநல பிரச்சினை உடைய மனிதர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிகிதா தற்போது நம்மோடு இல்லை. இது அனைத்திற்கும் காரணம் நம் அலட்சியம் மட்டுமே. அறிவுரை சொல்பவர்களையும் பூமர் அங்கிள் என்று சொல்லிவிட்டு கடந்து செல்கிறோம். ஆனால் அந்த பூமர் அங்கில்கள் சொல்லும் அறிவுரைகளை ஒரு முறையேனும் காது கொடுத்து கேட்டிருந்தார் இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது என்றே தோன்றுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *