கள்ளக்குறிச்சி விவகாரம்: ஸ்ரீமதியின் தாய் குற்றச்சாட்டு..!!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி, அந்த பள்ளியின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் கடந்த ஜூலை 17-ம் தேதி தனியார் பள்ளியானது சூறையாடப்பட்டது.

இந்நிலையில் கலவரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கலவர வீடியோவை ஆதாரமாக வைத்து சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அதே சமயம் மாணவியில் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் 16-வது இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் போராட்டம் இன்று கடலூரில் நடைப்பெற்றது.

அப்போது மாணவியின் தாய் செல்வியை கெளரவித்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துவது சரியல்ல என்று கூறியுள்ளார்.

மேலும், தனக்கு டிஎன்ஏ பரிசோதனை எடுக்கவேண்டும் என சிபிசிஐடி போலீசார் தெரிவிப்பது, தன்னை கொச்சைப்படுத்த முயற்சிப்பதாக சிபிசிஐடி போலீசார் மீது குற்றம்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சுதந்திர தினத்துக்குள் அத்திக்கடவு திட்டம் பயன்பாட்டிற்கு வரும்… முதல்வர் உறுதி 

ஜனவரி 15ஆம் தேதிக்குள் அவிநாசி அத்திக்கடவு திட்டம் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு…

செல்போனில் செலவிடும் பாதி நேரத்தை அறிவியல் செய்முறைகளை பார்க்கவும்… பள்ளி குழந்தைகளுக்கு எம்பி கனிமொழி வேண்டுகோள்

பெற்றோரிடமிருந்து செல்போனை பிடுங்கி இணையதளம் பார்க்கும் போது அறிவியல் செய்முறைகளை அதிகம் பார்க்க…