கேஸ் குடோன் தீ விபத்து: பலி எண்ணிக்கை 3-ஆக அதிகரிப்பு!!

காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியம்பாக்கம் கேஸ் குடோன் தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தை பொறுத்த வரையில் விபத்துகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மெற்கொண்ட போதிலும் சற்றும் குறைந்தபாடில்லை.

அந்த வகையில் காஞ்சிபுரம் அடுத்த தேவ ரியம்பாக்கம் கிராமத்தில் ஏற்பட்ட கேஸ் குடோன் தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேஸ் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஏற்கனவே ஜீவானந்தத்தின் மகள் சந்தியா மற்றும் பணியாளர் அமோத்குமார் உயிரிழந்த நிலையில், தற்பொழுது உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 உயர்ந்துள்ளது. பாரத் கேஸ் நிறுவன அதிகாரிகள் முன்னிலையில், கேஸ் குடோனில் இருந்த அனைத்து சிலிண்டர்களும் தரம் பிரிக்கப்பட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டது.

இதை தொடர்ந்து, கேஸ் குடோனுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். அதோடு விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

காத்திருந்து கடுப்பாகி களத்தில் இறங்கி சாலை சரி செய்த பொதுமக்கள்… அசத்தல் 

நெடுஞ்சாலை துறையிடம் சாலையை செப்பனிட கேட்டு சளித்துப்போன பொதுமக்கள் தாங்களாகவே செப்பனிட்டிருக்கின்றனர். கோவை…

ஐயோ தெரியாம செஞ்சிட்டேன் என்ன விட்டுடுங்க… போலீசாரிடம் கதறிய  கிஷோர்.கே.சாமி

அந்த நேரத்துல அத பண்ணிருக்க கூடாது… அது தவறு என்பதை உணர்ந்ததனால டிவிட்ட டெலிட் பண்னேன்… சைபர்…