புரட்டாசி அமாவாசை: சதுரகிரி கோவிலுக்கு 13 நாட்கள் செல்ல அனுமதி!!

தமிழகத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலிலுக்கு செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் 12 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தமிழக அரசு தடை விதித்து இருந்த நிலையில் தற்போது தொகுப்பு பரவல் குறைந்து இருப்பதால் கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் புரட்டாசி மாதத்தில் அமாவாசை அன்று பிதுர்பூஜை செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைப்பதுடன் எமனுக்கும் மகிழ்ச்சி ஏற்படும் என்று முன்னோர்கள் நினைப்பது உண்டு. அதன் படி, வருகின்ற மகாளய அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் சதுரகிரி மலைக்கு பக்தர்கள் அதிகமாக செல்வார்கள்.

தற்போது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பல்வேறு நிபந்தனைகள் உடன் வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். அதன் படி, வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கும், கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *