62 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன நடராஜர் சிலை: அமெரிக்காவில் கண்டுபிடிப்பு…!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவீதிகுடி எனும் ஊரில் உள்ள இருந்த 2000 ஆண்டுகள் பழமையான வேதபுரீஸ்வரர் கோயிலில் இருந்த, 62 ஆண்டுகளுக்கு முன்பு திருடுப்போன நடராஜர் சிலை அமெரிக்காவில் அருங்காட்சியகம் ஒன்றில் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தஞ்சை மாவட்டம் திருவேதிக்குடி கண்டியூரில் உள்ள 2000 ஆண்டுகள் பழமையான வேதபுரீஸ்வரர் கோயிலில் இருந்த தொன்மையான நடராஜர் சிலை திருடுப் போனது.
இது குறித்து தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வெங்கடாச்சலம் என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

இந்த புகாரை பெற்ற சிலை கடத்தல் தடுப்புபிரிவு இன்ஸ்பெக்டர் இந்திரா தலைமையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு இருந்தது. அதன் படி, புதுச்சேரியின் இந்தோ- பிரெஞ்சு நிறுவனத்திடம் இருந்து நடராஜர் சிலையின் புகைப்படத்தை வைத்து சோதனை நடத்தினர்.

அப்போது அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் திருடு போன நடராஜர் சிலை இருப்பதை சிலை கடத்தல் தடுப்புபிரிவின் விசாரணை குழுவினர் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து உள்துறை அமைச்சகத்தின் மூலமாக நடராஜர் சிலையை மீட்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *