அரசு கல்வி தொலைக்காட்சிக்கு சிஇஓ நியமனம்: பள்ளிக்கல்வித்துறை புதிய தகவல்!!

அரசு கல்வி தொலைக்காட்சிக்கு சிஇஓ நியமனம் தொடர்பாக மணிகண்ட பூபதி பணி நியமனத்தை முழுமையாக ரத்து செய்து விட்டதாக கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு நடத்தக்கூடிய கல்வி தொலைக்காட்சிக்கு தலைமை செயல் அதிகாரியாக மணிகண்டன் பூபதி என்பவர் கடந்த மாதம் 8-ம் தேதி நியமனம் செய்யப்பட்டார். குறிப்பாக மாதம் 1.5 லட்சம் சம்பளத்திற்கு, 2 ஆண்டுகள் நியமிக்கப்பட்டுவதாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இது குறித்த தகவல்கள் 13-ம் தேதி வெளியே வந்ததன. இதற்கு சோசியல்மீடியாவில் பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இதன் காரணமாக சிஇஓ நியமனம் தொடர்பாக மணிகண்ட பூபதி பணி நியமனத்தை முழுமையாக ரத்து செய்து விட்டதாக கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

அதோடு பணி நியமனம் குறித்த அறிக்கையை அதிகாரிகளுடன் கேட்டு இருப்பதாகவும், இது முதல்வரின் கவனத்திற்கு கொண்டுச்செல்லப்படுவதாகவும், அதன் பிறகு இறுதி முடிவை எடுக்கப்படும் என்ற ஒரு கருத்தையும் கூறியுள்ளார்.

அதன் படி, கடந்த சில தினங்களுக்கு முன் முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது இத்கைய அறிவிப்பானது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *