மக்களே உஷார்!! இன்று 18 மாவட்டங்களில்வெளுக்கப்போகும் கனமழை!!

தமிழகத்தின் உள் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, சேலம்‌, நாமக்கல்‌, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல்‌, தேனி, தென்காசி, மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சி, பெரம்பலூர்‌ மற்றும்‌ கரூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

அதே போல் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி,
திருப்பத்தூர்‌, நாமக்கல்‌ மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, ஈரோடு, சேலம்‌, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும்‌ திருப்பத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும்‌ என வானிலை மையம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *