சென்னையில் வர்த்தக சிலிண்டர் விலை அதிரடி குறைவு!!!

வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 96 ரூபாய் குறைந்தது 2,045 ரூபாய்க்கு விற்பனையாகுவதால் ஹோட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற இறக்க அடிப்படையில் இந்தியாவின் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றும் நிலையில் கேஸ் சிலிண்டர் விலையும் மாதத்திற்கு இரண்டு முறை மாற்றி அமைக்கப்படுகிறது.

இந்நிலையில் விலைவாசி கடுமையாக உயர்ந்து வரும் நேரத்தில் ஒன்றிய அரசு சிலிண்டர் விலையை குறைத்துள்ளது. அதன் படி, வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 96 ரூபாய் குறைந்தது 2,045 ரூபாய் குறைத்துள்ளது. மேலும், சிலிண்டர் விலை, ஜூலை மாதத்தில் இருந்து மாற்றம் இன்றி ஒரே விலையில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *