மீனவர்களே கவனம்!! நாளை இந்த பகுதிகளுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வீட்டில் முடங்கியுள்ளனர். இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, நாளை தமிழக கடலோரப்பகுதிகள்‌, குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்கிழக்கு வங்கக்கடல்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

லட்சத்தீவு பகுதிகள்‌, கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்‌ மற்றும்‌ மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

நாளை மறுநாள் தமிழக கடலோரப்பகுதிகள்‌, குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

லட்சத்தீவு பகுதிகள்‌, கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்‌ மற்றும்‌ மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

வருகின்ற 24,25 தேதிகளில் குமரிக்கடல்‌ பகுதிகள்‌, லட்சத்தீவு பகுதிகள்‌, கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்‌ மற்றும்‌ மத்துய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌ என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *